தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Today Gold Rate: போதும்..போதும்.. இப்படியே போனா எப்படி? வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் ரூ.1120 விலை உயர்ந்த தங்கம்!

Today Gold Rate: போதும்..போதும்.. இப்படியே போனா எப்படி? வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் ரூ.1120 விலை உயர்ந்த தங்கம்!

Mar 29, 2024, 11:24 AM IST

Today Gold Rate: சென்னையில் இன்று (மார்ச் 29) தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய நிலவரம் குறித்து பார்ப்போம்
Today Gold Rate: சென்னையில் இன்று (மார்ச் 29) தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய நிலவரம் குறித்து பார்ப்போம்

Today Gold Rate: சென்னையில் இன்று (மார்ச் 29) தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய நிலவரம் குறித்து பார்ப்போம்

Today Gold Rate: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. இதற்கிடையில், கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 51,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

உங்கள் நகரின் இன்றைய தங்கம் விலை அறிய இங்கே கிளிக் செய்யவும்
ட்ரெண்டிங் செய்திகள்

HBD Arthur Cotton: 'சோழனின் கல்லணையின் பெருமையை உலகிற்கு சொன்னவர்!’ சர் ஆர்தர் காட்டன் பிறந்தநாள் இன்று!

Heavy Rain : மக்களே உஷார்.. திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

Savukku Shankar Case: ’சிறையில் வேறு இடம் வேண்டும்!’ நீதிபதியிடம் கேட்ட சவுக்கு சங்கர்! காவலை நீட்டித்த நீதிபதி!

Freshworks Jobs: ‘+2 முடிச்சா IT வேலை ரெடி! பயிற்சியின் போது 10 ஆயிரம் சம்பளம்! அப்புறம் பல லட்சத்தில் சம்பளம்!’

இந்நிலையில், சென்னையில் இன்று (மார்ச் 29) தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய நிலவரம் குறித்து பார்ப்போம்.

இன்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 29) சவரனுக்கு ரூ.1120 உயர்ந்து ரூ.51,120-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.140 உயர்ந்து ரூ. 6,390க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய தங்கம் விலை நிலவரம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (மார்ச் 28) சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.50,000-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.35 உயர்ந்து ரூ. 6,250க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு இன்று (மார்ச் 29) 30 காசுகள் உயர்ந்து ரூ.80.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.80,800-க்கு விற்பனையாகிறது.

நேற்றைய வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.80.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.80,500-க்கு விற்பனையாகிறது.

விலை உயர்வு ஏன்?

சீன, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் டாலருக்கு பதிலாக தங்கத்தை வாங்கிக் குவிப்பது போன்றவற்றால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தங்கம் விலை சில நாட்களில் சவரன் ரூ.50,000-ஐ தாண்டும் என நிபுணர்கள் தெரிவித்து வந்த நிலையில், இன்று அதிரடியாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர மக்களும், நகைப்பிரியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம் விலை உயர்வு ஏன்?

இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது. தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். குழந்தை பிறப்பது முதல் பல்வேறு நல்ல நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவது நமது வழக்கமாக உள்ளது. தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பெண் குழந்தை என்றால் திருமணம் செய்து கொடுக்கும்போது பல சவரன் நகையை அணிவித்து அனுப்பும் பழக்கம் பல குடும்பங்களில் இன்றும் வழக்கத்தில் இருக்கிறது. ஆபத்து காலங்களில் அடகு வைப்பதற்கும் தங்க நகைகள் உபயோகமாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மத்திய தங்க பத்திர மூதலீடு திட்டத்தை கொண்டுவந்துள்ள போதிலும், தங்கம் விற்பனையாவது குறையவில்லை என்பதே உண்மை. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து முதலீட்டு உலகம் சற்று பயந்து போனது. ஆனாலும், கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி கண்டுள்ளது. இன்றைய தங்கம் விலைதங்கமானது வரலாற்று ரீதியாக அரிய உலோகமாகவே கருதப்பட்டு வந்தது. காரட் என்ற அலகால் தங்கம் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது தூயத் தங்கமாகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது.

22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தங்கத்தின் மதிப்பு கிடைக்கிறது. 22 காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி