தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  காலங்காத்தாலயேவா.. டிரான்ஸ்பார்மர் என்னப்பா செஞ்சது உங்கள?

காலங்காத்தாலயேவா.. டிரான்ஸ்பார்மர் என்னப்பா செஞ்சது உங்கள?

May 16, 2023, 12:41 PM IST

அதிவேகத்தில் இயக்கப்பட்ட அந்த காரில் அமமுக கொடி கட்டி இருந்தது
அதிவேகத்தில் இயக்கப்பட்ட அந்த காரில் அமமுக கொடி கட்டி இருந்தது

அதிவேகத்தில் இயக்கப்பட்ட அந்த காரில் அமமுக கொடி கட்டி இருந்தது

கோவை இருகூர் சாலையில் இரட்டைப்புளியமரம் அருகே உள்ள இன்று காலை மது போதையில் காரில் வந்த நபர் டிரான்ஸ்பார்மர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். இதில் டிரான்ஸ்பார்மர் சரிந்து விழுந்ததால் அந்த பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

ட்ரெண்டிங் செய்திகள்

Duraimurugan: ’சிலந்தி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் கேரளா!’ கள்ளமவுனம் காப்பது ஈபிஎஸ்க்கு கைவந்த கலை! துரைமுருகன்!

’Seeman about Eelam: ஈழ விடுதலைக்கான அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்!’ சீமான்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

கோவை இருகூர் சாலையில் இரட்டை புளியமரம் அருகே உள்ள டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. அங்கு விதிகளை மீறி 24 மணி நேரமும் மதுபானம் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை அந்த கடைக்கு மது வாங்குவதற்காக முழு போதையில் ஒருவர் காரை வேகமாக இயக்கி வந்ததாக கூறப்படுகிறது. வந்த வேகத்தில் குடி போதையில் ஆசாமி காரை வேகமாக கடையின் அருகில் இருந்த டிரான்ஸ்பாரம் பக்கமாக நிறுத்த முயன்றார். ஆனால் கட்டுப்பாட்டை இழந்த கார் டிரான்ஸ்பார்மர் மீது அதி வேகத்தில் மோதியது. இதில் டிரான்ஸ்பார்மர் வெடித்ததுடன், காரின் மீது டிரான்ஸ்பார்மர் சரிந்தது.

இதைத்தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. உடனடியாக அந்த பகுதியில் இருந்த மக்கள் முழு போதையில் இருந்த அந்த நபரை காரில் இ ருந்து மீட்டு அமர வைத்தனர். சிங்காநல்லூர் காவல்துறையினருக்கு டிரான்பார்மர் மீது மோதியது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதிவேகத்தில் இயக்கப்பட்ட அந்த காரில் அமமுக கொடி கட்டி இருந்தது. இந்நிலையில் காவல் துறையினர் ஓட்டி வந்த நபர் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் போதை ஆசாமியின் செயலால் அந்த பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.

இதையடுத்து போதை ஆசாமியை காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து அந்த வழியாக சென்றவர்கள் காலங்கதாத்தாலயேவா இப்படி. பேசாம நின்னுக்கிட்டு இருந்த டிரான்ஸ்பார்மர் மேலபோய் இப்படியா இடிப்பது சென்றவாறு சென்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி