தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Bjp Executive Arrested For Swindling 70 Lakhs To Get Job In Electricity Board

BJP executive arrest: 70 லட்சம் மோசடி செய்த பாஜக நிர்வாகி கைது!

Oct 23, 2022, 05:42 PM IST

மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக 70 லட்சம் பணத்தை மோசடி செய்த பாஜக நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்தனர்
மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக 70 லட்சம் பணத்தை மோசடி செய்த பாஜக நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்தனர்

மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக 70 லட்சம் பணத்தை மோசடி செய்த பாஜக நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்தனர்

மின்சார வாரியத்தில் உதவி பொறியாளர் அல்லது கேங்மேன் வேலை வாங்கித் தருவதாக கூறி 70 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: ‘மக்களே உஷார்! மீண்டும் வீசப்போகும் வெப்ப அலை!’ சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 10!

Today Gold Rate : சூப்பர் மக்களே.. நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை சரிவு.. சவரனுக்கு ரூ.800 குறைவு!

இனி வெயிலுக்கு குட் பாய் சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு.. அடுத்த ஆறு நாட்களுக்கு மழை பெய்யுமாம்.. எங்கு தெரியுமா?

திருவெண்ணெய்நல்லூர் டீ புதுப்பாளையம் பகுதியில் அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சங்கரன். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு மின்சார வாரியத்தில் உதவி மின் பொறியாளர் மற்றும் கேங்மேன் பணிகளில் சேர ஒரு நபருக்கு மூன்று லட்சம் ரூபாய் வீதம் என்ன தங்கமயில் என்பவர் உள்பட 58 பேர்களிடம் பணம் வாங்கியுள்ளார்.

மேலும் அரசியல்வாதிகளிடம் தனக்கு நல்ல பழக்கம் இருப்பதாக ஆசிவார்த்தை கூறி மொத்தம் 94 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார். யாருக்கும் வேலை வாங்கித் தராத காரணத்தால் கடந்த 2021 ஆம் ஆண்டு பணம் கொடுத்தவர்கள் மீண்டும் பணத்தை கேட்டுள்ளனர். இதனால் 24 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆசிரியர் தவணை முறையில் செலுத்தியுள்ளார்.

மீதம் தர வேண்டி இருந்த 70 லட்சம் ரூபாயை தற்போது வரை திருப்பி தராத காரணத்தால் தங்கமயில் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அரசு பள்ளி ஆசிரியர் சங்கரனை இன்று காவல்துறையினர் கைது செய்தனர். இந்த அரசு பள்ளி ஆசிரியர் சங்கரன் பாஜகவில் மாவட்ட கல்வியாளர் பிரிவு செயலாளராக இருந்து வருகிறார்.