தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vande Bharat Train: கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்

Vande Bharat Train: கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்

Karthikeyan S HT Tamil

Dec 27, 2023, 12:17 PM IST

கோவை - பெங்களூரூ இடையேயான வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது.
கோவை - பெங்களூரூ இடையேயான வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது.

கோவை - பெங்களூரூ இடையேயான வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் முக்கிய வழித் தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் சென்னை - கோவை, சென்னை - நெல்லை, சென்னை - மைசூரு ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ட்ரெண்டிங் செய்திகள்

’Seeman about Eelam: ஈழ விடுதலைக்கான அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்!’ சீமான்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

Weather Update: வங்ககடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! 19 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

இந்த சூழலில், கோவை-பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து தென்னக ரயில்வே சார்பில் கோவை-பெங்களூரு இடையே வருகிற டிச.30ஆம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலமாகத் தொடங்கி வைக்க உள்ளாா்.

இந்த நிலையில், கோவை - பெங்களூரூ இடையேயான வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் இன்று தொடங்கியுள்ளது. கோவை ரயில் நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 5 மணிக்கு பெங்களூருக்கு சோதனை ஓட்டம் நடைபெற்றது. திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக பெங்களூருக்கு காலை 11.30 மணியளவில் சென்றடைந்தது.

மீண்டும் பிற்பகல் 1.40 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் ரயில் கோவைக்கு இரவு 8 மணியளவில் வந்தடையும். இந்த வந்தே பாரத் ரயிலில் ஒரு சொகுசுப் பெட்டி, 7 சாதாரணப் பெட்டிகள் என மொத்தம் 8 பெட்டிகள் அடங்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி