தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  100 Days Work : 100 நாள் வேலைக்கு குறைதீர்ப்பாளர்கள் நியமனம் – அரசு அறிவிப்பு

100 Days Work : 100 நாள் வேலைக்கு குறைதீர்ப்பாளர்கள் நியமனம் – அரசு அறிவிப்பு

Priyadarshini R HT Tamil

May 13, 2023, 12:18 PM IST

100 Days Work : மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி (Ombudsperson) என 37 குறைதீர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
100 Days Work : மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி (Ombudsperson) என 37 குறைதீர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

100 Days Work : மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி (Ombudsperson) என 37 குறைதீர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் பிரிவு 27ன் படி அனைத்து மாநிலங்களிலும் குறைதீர்ப்பாளர் (Ombudsperson) நியமிக்கப்படுகின்றனர். அதனடிப்படையில் தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி (Ombudsperson) என 37 குறைதீர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

Weather Update: வங்ககடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! 19 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

Today Gold Rate: வரலாற்றில் புதிய உச்சம்..வாரத்தின் முதல் நாளிலே ஷாக் கொடுக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம் இதோ!

வேலைகோருதல், ஊதியம் அளித்தல், ஊதியம் தாமதமாக வழங்கியதற்கு வழங்கப்படும் இழப்பீடு, பணித்தள வசதிகள் உள்ளிட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் தொடர்பாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து புகார்கள் அலுவலகத்தில் அல்லது களஆய்வின்போது குறைகேள் அலுவலரிடம் பதிவு செய்யப்படலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

விதி அல்லது சட்டம் சம்பந்தப்பட்ட சிக்கலான கேள்விகள் தவிர அனைத்து புகார்களும், குறைகேள் அலுவலரால் புகார் பெற்ற நாளிலிருந்து 15 நாட்களுக்குள் முடிக்கப்படுகிறது. எஞ்சிய புகார்கள் 60 நாட்களுக்குள் முடிக்கப்படுகிறது.

குறைகேள் அலுவலரால் குறைகள் கையாளப்பட்ட விதம், பணிகளின் தரம் பற்றிய ஆய்வு மற்றும் திட்ட செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் போன்றவை அறிக்கையாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட வலைதளத்தில் வெளியிடப்படுகிறது. 37 மாவட்டங்களின் பெயர்கள் மற்றும் குறைதீர்ப்பாளர்களின் கைப்பேசி எண்களின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அரியலூர் – வைத்தீஸ்வரன் - 8925811301

செங்கல்பட்டு – தினேஷ்குமார் மார்ட்டின் - 8925811302

கோயமுத்தூர் – நவநீதகிருஷ்ணன் - 8925811303

கடலூர் – ஏஞ்சல் கேத்தரின் – 8925811304

தர்மபுரி - தௌலத் பாஷா – 8925811305

திண்டுக்கல் – பிரகாஷ் – 8925811306

ஈரோடு – பாலகிருஷ்ணன் - 8925811307

கள்ளக்குறிச்சி – ரமேஷ - 8925811308

காஞ்சிபுரம் – கணேசன் - 8925811309

கன்னியாகுமரி – சத்யசீலன் - 8925811310

கரூர் – பாலசுந்தரம் - 8925811311

கிருஷ்ணகிரி – அஸ்மத்துல்லா - 8925811314

மதுரை – பாலசுப்ரமணியன் - 8925811315

மயிலாடுதுறை – மோகன் - 8925811316

நாகப்பட்டினம் – முருகேசன் - 8925811317

நாமக்கல் – சியாமளா - 8925811318

பெரம்பலூர் – ஜானகிராமன் - 8925811319

புதுக்கோட்டை – ரகோத்தமன் - 8925811320

ராமநாதபுரம் – ராமமூர்த்தி - 8925811321

ராணிப்பேட்டை – கோபிநாத் - 8925811322

சேலம் – காந்திமதி - 8925811323

சிவகங்கை – பிரபு - 8925811324

தஞ்சாவூர் – கலைவாணி - 8925811325

நீலகிரி – சிவதேவ்குமார் - 8925811326

தேனி – சந்திரசேகரன் - 8925811328

தென்காசி – ஜெயகுமார் - 8925811329

தூத்துக்குடி – சேவகபாண்டி - 8925811330

திருச்சி – பாண்டியராஜன்- 8925811331

திருநெல்வேலி – மாணிக்பிரபு - 8925811332

திருப்பத்தூர் – மகாலட்சுமி- 8925811338

திருப்பூர் – பிரேமலதா - 8925811339

திருவள்ளூர் – சைமன் அருள் பிரகாசம் - 8925811340

திருவண்ணாமலை – அண்ணாமலை - 8925811341

திருவாரூர் – கதிரேசன் - 8925811342

வேலூர் – ரஞ்சிதா - 8925811344

விழுப்புரம் – தஸ்லிம் ஆர்ஃப் - 8925811345

விருதுநகர் – பெரியசாமி - 8925811346

பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி

திட்டத்தில் பணிபுரிபவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் மேற்கண்ட

குறைதீர்ப்பாளர்களின் தொலைபேசி எண்களில் புகார் அளிக்கலாம் என

தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி