தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  இது 44 ஆவது தற்கொலை.. இனியும் தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி!

இது 44 ஆவது தற்கொலை.. இனியும் தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி!

Divya Sekar HT Tamil

Mar 04, 2023, 01:02 PM IST

ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படாவிட்டால் தற்கொலைகள் தொடரும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படாவிட்டால் தற்கொலைகள் தொடரும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படாவிட்டால் தற்கொலைகள் தொடரும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகம் உள்பட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழப்பவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவம் தொடர் கதையாகி வருவகிறது. இந்நிலையில் இன்று ஆன்லைன் சூதாட்டத்தில் சுமார் 20 லட்சம் ரூபாய் பணத்தை இழந்த சென்னையை சேர்ந்த மருத்துவ பிரதிநிதி வினோத்குமார் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Today Gold Rate: ஒரே நாளில் சட்டென குறைந்த தங்கம் விலை..சவரனுக்கு எவ்வளவு குறைவு தெரியுமா? - இன்றைய நிலவரம் இதோ!

TNEB Bill: விவசாயிக்கு ரூ.8.75 லட்சம் EB பில் வந்த விவகாரம்.. '8' போட்டு வேட்டு வைத்தது அம்பலம்!

Tiruvannamalai: மாமியாரை கூலிப்படை வைத்து கொலை செய்த மருமகளுக்கு என்ன தண்டனை தெரியுமா?- மகிளா கோர்ட் பரபரப்பு தீர்ப்பு!

Weather Update: வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி..3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!

இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், “சென்னையையடுத்த மாடம்பாக்கத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்ற மருந்து நிறுவன அதிகாரி ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு இரங்கல், அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

வினோத்குமார் அவரிடம் இருந்த பணம் முழுவதையும் ஆன்லைனில் சூதாடி இழந்துள்ளார். கடன் வழங்கும் செயலிகள் மூலமாகவும் கடன் வாங்கி சூதாடியுள்ளார். சூதாடுவதற்காக எந்த எல்லைக்கும் சென்றிருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது. அந்த அளவுக்கு ஆன்லைன் சூதாட்டம் கொடுமையானது. ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் உயர்நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்ட பிறகு நிகழ்ந்த 44-ஆவது தற்கொலை இது.

ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு நிகழ்ந்திருக்கும் 15-ஆவது தற்கொலை. ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படாவிட்டால் தற்கொலைகள் தொடரும். ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் அக்டோபர் 18-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு, இன்றுடன் 138 நாட்களாகியும் இன்னும் ஆளுனர் ஒப்புதல் அளிக்கவில்லை.

அதன்பிறகு நடந்த 15 பேரின் தற்கொலைகளுக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தான் பொறுப்பேற்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ஏன் தேவை? என்பதை புள்ளிவிவரங்களுடன் தமிழக அரசு விளக்கியுள்ளது. இனியும் தாமதிக்காமல் ஆளுனர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதற்காக அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்”எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி