தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  All The Best Students! First Year Classes In Arts And Science Colleges From June 22!

Arts and Science Colleges : அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கு இத்தனை பேர் விண்ணப்பமா? முதலாம் ஆண்டு வகுப்புகள் எப்போது?

Priyadarshini R HT Tamil

May 23, 2023, 09:37 AM IST

Arts and Science Colleges : கலை, அறிவியல் கல்லூரிகளில் ஜூன் 22ம் தேதி முதல் முதலாமாண்டு வகுப்புகள் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Arts and Science Colleges : கலை, அறிவியல் கல்லூரிகளில் ஜூன் 22ம் தேதி முதல் முதலாமாண்டு வகுப்புகள் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Arts and Science Colleges : கலை, அறிவியல் கல்லூரிகளில் ஜூன் 22ம் தேதி முதல் முதலாமாண்டு வகுப்புகள் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 8ம் தேதி 12ம் வகுப்பு தேர்வுகள் முடிவு வெளியானது. இதையடுத்து கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தீவிரமாக துவங்கியது. மே 1ம் தேதி முதலே தனியார் கலை, அறிவியல் கல்லூரிகள் ஆன்லைன் விண்ணப்பங்கள் பெற துவங்கிய நிலையில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பது தேர்வு முடிவுகள் வெளியான அன்றே துவங்கின.

ட்ரெண்டிங் செய்திகள்

TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 10!

Today Gold Rate : சூப்பர் மக்களே.. நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை சரிவு.. சவரனுக்கு ரூ.800 குறைவு!

இனி வெயிலுக்கு குட் பாய் சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு.. அடுத்த ஆறு நாட்களுக்கு மழை பெய்யுமாம்.. எங்கு தெரியுமா?

Tamil Nadu Government: ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்கு சிக்கல்..தமிழக அரசு விடுக்கும் எச்சரிக்கை இதுதான்!

அன்று முதல் மே 19ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. பின்னர் மாணவர்களின் நலன் கருதி கூடுதலாக மூன்று நாட்கள் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி மே 22ம் தேதி (நேற்று) வரை அவர்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டது.

தமிழகத்தில் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7,395 இடங்கள் உள்ளன. இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நேற்றுடன் நிறைவடைந்தது.

அந்தவகையில், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர 2 லட்சத்து 99 ஆயிரத்து 558 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 104 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். இதில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 752 மாணவர்களும், 1 லட்சத்து 28 ஆயிரத்து 274 மாணவிகளும், 78 திருநங்கைகளும் அடங்குவர். மேலும், அரசு பள்ளிகளில் படித்த மாணவ மாணவிகள் 54,638 பேர் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து முதலாம் ஆண்டு வகுப்புகள் ஜூன் 22ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கான கலந்தாய்வு மே 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறுகிறது.

பொது கலந்தாய்வு ஜூன் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூன் 22ம் தேதி முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக கலை அறிவியல் கல்லூரிகள்தான் முதலாவதாக துவங்கும். பின்னர்தான் பொறியியல் உள்ளிட்ட மற்ற படிப்புகள் துவங்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

டாபிக்ஸ்