தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Actress Kasthuri Tweet About Bjp Daisy

Actress Kasthuri : பாஜகவில் யாராவது சகோதரின்னு கூப்பிட்டா ஜாக்கிரதையா இருக்கணும்

Divya Sekar HT Tamil

Nov 25, 2022, 07:17 AM IST

இனி பாஜக ஆளுங்க யாராவது சகோதரின்னு கூப்பிட்டா ஜாக்கிரதையா இருக்கணும் என நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இனி பாஜக ஆளுங்க யாராவது சகோதரின்னு கூப்பிட்டா ஜாக்கிரதையா இருக்கணும் என நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இனி பாஜக ஆளுங்க யாராவது சகோதரின்னு கூப்பிட்டா ஜாக்கிரதையா இருக்கணும் என நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சியுடன் தொலைபேசியில் உரையாடியபோது அவரை ஓ.பி.சி. பிரிவு மாநில பொதுசெயலாளர் திருச்சி சூர்யா சிவா அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. 

ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: ‘மக்களே உஷார்! மீண்டும் வீசப்போகும் வெப்ப அலை!’ சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

TNPSC Group 4: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் - பகுதி 10!

Today Gold Rate : சூப்பர் மக்களே.. நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை சரிவு.. சவரனுக்கு ரூ.800 குறைவு!

Tamil Nadu Government: ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்கு சிக்கல்..தமிழக அரசு விடுக்கும் எச்சரிக்கை இதுதான்!

மேலும், இருவரும் சரமாரியாக ஆபாச வார்த்தைகளில் பேசியுள்ளனர். அவர்கள் இருவரும் பேசியதாக கூறப்பட்ட ஆடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகியது. இந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பி இருந்தது.

இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக திருப்பூர் பாஜக அலுவலகத்தில் திருச்சி சூர்யா சிவா, டெய்சி ஆகியோரிடம் பாஜக ஒழுங்கு நடவடிக்கை குழு முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.

விசாரணைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய டெய்சி , “எங்களுக்கிடையில் பரஸ்பரம் பேசி முடித்துக்கொண்டோம். தம்பி போலத்தான் சூர்யா சிவா இதனை பெரிதுபடுத்த வேண்டும். இதுகுறித்து தலைவர் அண்ணாமலை என்னிடம் பேசினார்.

இனிமேல் இதுபோல் நடக்க கூடாது என என்னிடம் அண்ணாமலை உறுதி வாங்கிக்கொண்டார். முறையாக கூப்பிட்டு விசாரித்தனர். மற்ற கட்சியில் உள்ள தலைவர்களும் இதுபோன்று பேசி உள்ளனர். இது ஒன்றும் புதிது இல்ல”என்றார்.

இதுகுறித்து டுவிட்டரில் விமர்சித்துள்ள நடிகை கஸ்தூரி, “என்னது தம்பியா ?!

அரை மணி நேரம் அசிங்கமா பேசுனவரு அரை பைசாவுக்கு விளக்க அறிக்கை கூட விடலை.

அப்போ பேசுனதெல்லாம் கரெக்ட்டுதான் போல.

டெய்சிக்காக பெண்ணியம் கண்ணியம்ன்னு பொங்கின என்னை நானே..(செருப்பு ஸ்டிக்கர்)

இனி பாஜக (BJP)ஆளுங்க யாராவது சகோதரின்னு கூப்பிட்டா ஜாக்கிரதையா இருக்கணும் !”என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ள சூர்யா சிவா, பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாதத்துக்கு நீக்கப்படுகிறார் என அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

டாபிக்ஸ்