தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Aavin: ஐஸ்கிரீம் விலையை உயர்த்தியது ஏன்?.. ஆவின் நிர்வாகம் சொல்லும் விளக்கம் இதோ!

Aavin: ஐஸ்கிரீம் விலையை உயர்த்தியது ஏன்?.. ஆவின் நிர்வாகம் சொல்லும் விளக்கம் இதோ!

Karthikeyan S HT Tamil

Mar 03, 2024, 01:21 PM IST

இடுப்பொருட்களின் விலை உயர்வு காரணமாகவே ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இடுப்பொருட்களின் விலை உயர்வு காரணமாகவே ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இடுப்பொருட்களின் விலை உயர்வு காரணமாகவே ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

ஆவின் பாலகங்களில் விற்பனை செய்யப்படும் ஐஸ்கிரீம் விலை திடீரென உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து ஆவின் நிர்வாகம் அனைத்து விற்பனையாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதன்படி, சில ஐஸ்கிரீம் வகைகளின் விலை ரூ.2 முதல் ரூ.5 வரை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழை.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை!

Redpix Felix Gerald: ’சவுக்கு சங்கரின் நண்பர் ரெட்பிக்ஸ் பெலிக்சை துரத்தும் சோகம்!’ சொந்த ஊரில் ரெய்டு செய்யும் போலீஸ்!

Savukku Shankar Case: ’போலீஸ் துன்புறுத்தவில்லை’ சவுக்கு சங்கர் நீதிபதியிடம் பரபரப்பு பதில்! மே 28 வரை காவல் நீட்டிப்பு

Redpix Felix Gerald: ’சவுக்கு சங்கரின் நண்பர் பெலிக்ஸ்க்கு வரும் மே 31 வரை நீதிமன்ற காவல்!’ கோவை நீதிமன்றம் உத்தரவு

65 எம்.எல். எடை கொண்ட சாக்கோபார் ஐஸ்கிரீம் விலை ரூ.20-ல் இருந்து ரூ.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 125 எம்.எல். எடை கொண்ட பால் வெண்ணிலா ஐஸ்கிரீம் ரூ.28-ல் இருந்து ரூ.30 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. 100 எம்.எல். எடை கொண்ட கிளாசிக் கோன் வெண்ணிலா ரூ.30-ல் இருந்து ரூ.35-க்கும், 100 எம்.எல். எடைகொண்ட கிளாசிக் கோன் சாக்லேட் விலை ரூ.30-ல் இருந்து ரூ.35-க்கும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் ஆவின் நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இடுப்பொருட்களின் விலை உயர்வு காரணமாகவே ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் அனைத்து பொதுமக்களுக்கும் ஏற்ற வகையில் தரமான முறையில் ஆவின் நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பால் விற்பனையில் முன்னோடி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது. ஆவின் நிறுவனம் பல்வேறு வகையான பால் உப பொருட்களை தரமான முறையில் தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.

மேலும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் விரும்பி சுவைக்கும் சுமார் 100 வகையான ஐஸ்கிரீம்களை ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கோடை காலத்தில் கூடுதலாக விற்பனையை 20% அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இடுப்பொருட்களின் விலை சற்று உயர்ந்துள்ளதால் தற்பொழுது நான்கு வகையான ஐஸ்கிரீம் விலையை மட்டுமே ஆவின் நிறுவனம் மாற்றி அமைத்துள்ளது. இந்த சிறிய விலையேற்றம் இன்றியமையாததாகும். எதிர்வரும் கோடையை முன்னிட்டு அனைத்து பொதுமக்களும் குழந்தைகளும் ஆவின் நிறுவனத்தின் சுவையான ஐஸ்கிரீமை வாங்கி மகிழுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி