தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Crime : மகன் இறந்தது கூட தெரியாமல் தாய்.. இரண்டு நாட்கள் வீட்டிற்குள்ளே இருந்த சோகம்.. துர்நாற்றம் வீச வெளிவந்த உண்மை!

Crime : மகன் இறந்தது கூட தெரியாமல் தாய்.. இரண்டு நாட்கள் வீட்டிற்குள்ளே இருந்த சோகம்.. துர்நாற்றம் வீச வெளிவந்த உண்மை!

Divya Sekar HT Tamil

May 15, 2023, 02:02 PM IST

சேலத்தில் மர்மமான முறையில் இறந்த ஆட்டோ ஓட்டுரின் சடலத்துடன் இரண்டு நாட்களாக வீட்டுக்குள்ளேயே அவருடைய தாயார் இருந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலத்தில் மர்மமான முறையில் இறந்த ஆட்டோ ஓட்டுரின் சடலத்துடன் இரண்டு நாட்களாக வீட்டுக்குள்ளேயே அவருடைய தாயார் இருந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலத்தில் மர்மமான முறையில் இறந்த ஆட்டோ ஓட்டுரின் சடலத்துடன் இரண்டு நாட்களாக வீட்டுக்குள்ளேயே அவருடைய தாயார் இருந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் சாமிநாதபுரத்தைச் சேர்ந்தவர் உமாசங்கர் (45). ஆட்டோ ஓட்டுநராக இருந்தார். இவரது தாய் ராஜேஸ்வரி. உமாசங்கர் மனைவி கடந்த 15 ஆண்டுக்கு முன்னர் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் உமாசங்கர் தனது தாயார் ராஜேஸ்வரியுடன் வசித்து வந்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Duraimurugan: ’சிலந்தி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் கேரளா!’ கள்ளமவுனம் காப்பது ஈபிஎஸ்க்கு கைவந்த கலை! துரைமுருகன்!

’Seeman about Eelam: ஈழ விடுதலைக்கான அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்!’ சீமான்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

ராஜேஸ்வரி சற்று மனநலம் பாதித்தவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவருடைய வீடு இரண்டு நாட்களாக திறக்கப்படாமல் இருந்தது. மேலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.இதனால் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து அவர்கள் பள்ளப்பட்டி காவல்நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ராஜேஸ்வரி வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, உமாசங்கர் படுக்கையில் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. சடலத்தை மீட்ட காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உமாசங்கர் இரு நாட்களுக்கு முன்பே இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். உமாசங்கர் எப்படி உயிரிழந்தார்? தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைப்பெற்று வருகிறது.

மகன் இறந்தது கூட தெரியாமல் அவருடைய தாயார் வீட்டுக்குள்ளேயே உண்ண உணவு இல்லாமல் மகனில் சடலத்துடன் இரண்டு நாள் வசித்து வந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

அடுத்த செய்தி