தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Dindugal : டிவி வாங்குவது போல் கடைக்கு வந்த நபர்.. கடைசியில் ட்விஸ்ட்.. சிசிடிவியால் வெளிவந்த உண்மை!

Dindugal : டிவி வாங்குவது போல் கடைக்கு வந்த நபர்.. கடைசியில் ட்விஸ்ட்.. சிசிடிவியால் வெளிவந்த உண்மை!

Divya Sekar HT Tamil

Jul 08, 2023, 11:46 AM IST

நத்தத்தில் பர்னிச்சர் கடையில் டி.வி.வாங்குவது போல் நடித்து எல்.இ.டி.டிவி திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நத்தத்தில் பர்னிச்சர் கடையில் டி.வி.வாங்குவது போல் நடித்து எல்.இ.டி.டிவி திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நத்தத்தில் பர்னிச்சர் கடையில் டி.வி.வாங்குவது போல் நடித்து எல்.இ.டி.டிவி திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டுப்பட்டியை சேர்ந்தவர் ராஜன்(35) இவர் நத்தம் - அசோக்நகர் பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று மதியம் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் புதிய டிவிக்களின் விலையை விசாரித்து உள்ளார். உடனே கடைக்காரர் குடோனில் உள்ள டிவிக்களை பார்க்குமாறு அழைத்து சென்றுள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

Velumani Admk: ‘அண்ணன் டா.. தம்பிங்கடா’.. ‘அதிமுகவில் பிளவா.. நெவர்.. அவங்க தூண்டி விடுறாங்க’ - வேலுமணி விளக்கம்

Weather Update: வங்ககடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! 19 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

Today Gold Rate: வரலாற்றில் புதிய உச்சம்..வாரத்தின் முதல் நாளிலே ஷாக் கொடுக்கும் தங்கம் விலை - இன்றைய நிலவரம் இதோ!

இந்நிலையில் திடீரென குடோனில் இருந்து கடைக்கு வந்த நபர் கடையின் முன்னால் இருந்த 20 ஆயிரம் மதிப்புள்ள புதிய எல்.இ.டி.டிவியை திருடிச் சென்றுவிட்டார்.

 இது பர்னிச்சர் கடையில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் திருடிச் செல்வது பதிவாகி உள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து கடைக்காரர் நத்தம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி சி.சி.டி.வி காட்சிகளை வைத்து விசாரனை நடத்தி வருகிறார்.

இதேபோல சேலத்தில் பைக் திருட்டு ஒன்று நேற்று முன்தினம் நடந்துள்ளது. சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்த பாலு என்பவர் தனது இருசக்கர வாகனத்தில், நண்பரை பார்ப்பதற்காக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அருகில் இருந்த தேநீர் கடையில் நண்பருடன் டீஅருந்தி முடித்துவிட்டு வெளியே வந்துள்ளார்.

அப்போது தனது இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.பின்னர் அவரது நண்பருடன் இணைந்து பாலு இருசக்கர வாகனத்தை தேடி பார்த்துள்ளார். அப்போது இருசக்கர வாகனம் சரிபார்ப்பு பட்டறையில் அவரது வாகனம் நின்று கொண்டிருந்தது. உடனே விசாரித்தபோது சேலம் மன்னார்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் வாகனத்தை திருடியது தெரியவந்தது.

பின்னர், இருசக்கர வாகனத்தில் வைத்து வாகனத்தை திருடிய ராஜாவை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இருசக்கர வாகனத்தை திருடியது மட்டுமில்லாமல் திருடிய உடனே நேரடியாக கோயிலுக்கு எடுத்து சென்ற ராஜா, வண்டிக்கு எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்து வாகனத்தை சொந்த வாகனம்போல், சரிசெய்ய எடுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி