தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  108 ஆம்புலசில் டிரைவர், மருத்துவ உதவியாளர் பணிகள் : நாளை தேர்வு எங்கெங்கு?

108 ஆம்புலசில் டிரைவர், மருத்துவ உதவியாளர் பணிகள் : நாளை தேர்வு எங்கெங்கு?

Priyadarshini R HT Tamil

Jan 27, 2023, 12:27 PM IST

Employment News: 108 ஆம்புலன்சில் டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கு சென்னை மற்றும் வேலூரில் நாளை தேர்வுகள் நடைபெறுகிறது. தகுதியுள்ளவர்கள் கலந்துகொள்ள அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
Employment News: 108 ஆம்புலன்சில் டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கு சென்னை மற்றும் வேலூரில் நாளை தேர்வுகள் நடைபெறுகிறது. தகுதியுள்ளவர்கள் கலந்துகொள்ள அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

Employment News: 108 ஆம்புலன்சில் டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கு சென்னை மற்றும் வேலூரில் நாளை தேர்வுகள் நடைபெறுகிறது. தகுதியுள்ளவர்கள் கலந்துகொள்ள அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இஎம்ஆர்ஐ கிரீன் ஹெல்த் சர்வீஸ்நிறுவனம்மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் வாயிலாக மொத்தம் 1,200-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைப் பொருத்தவரை 160க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அவைதவிர 15 இரு சக்கர அவசர உதவி வாகனங்களும் உள்ளன. அவசர கால கட்டுப்பாட்டு மையத்துக்கு நாளொன்றுக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகின்றன. இந்நிலையில், அவசரகால மருத்துவ உதவியாளர்கள் பணியில் இருப்பது அவசியமாகிறது. 

ட்ரெண்டிங் செய்திகள்

தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழை.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை!

Redpix Felix Gerald: ’சவுக்கு சங்கரின் நண்பர் ரெட்பிக்ஸ் பெலிக்சை துரத்தும் சோகம்!’ சொந்த ஊரில் ரெய்டு செய்யும் போலீஸ்!

Savukku Shankar Case: ’போலீஸ் துன்புறுத்தவில்லை’ சவுக்கு சங்கர் நீதிபதியிடம் பரபரப்பு பதில்! மே 28 வரை காவல் நீட்டிப்பு

Redpix Felix Gerald: ’சவுக்கு சங்கரின் நண்பர் பெலிக்ஸ்க்கு வரும் மே 31 வரை நீதிமன்ற காவல்!’ கோவை நீதிமன்றம் உத்தரவு

மருத்துவ உதவியாளர் பணியிடங்களில் சேர பிஎஸ்சி நர்சிங் அல்லது டிஜிஎன்எம் அல்லது பி.எஸ்சி. விலங்கியல், தாவரவியல், நுண் உயிரியல், உயிரி வேதியியல், உயிரி தொழில்நுட்பவியல் படிப்பில் ஏதேனும் ஒன்றை நிறைவு செய்திருக்கவேண்டும். இல்லையெனில், ஏஎன்எம், ஜிஎன்எம், டிஎம்எல்டி ஆகிய படிப்புகளை 12ஆம் வகுப்பு தேர்ச்சிக்குப் பிறகு நிறைவு செய்திருத்தல் அவசியம். 19 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் அப்பணியில் சேரலாம். மாத ஊதியம்: ரூ.15435/- (மொத்த ஊதியம்) வழங்கப்படும்.  

ஓட்டுநர் பணியிடங்களில் சேர விரும்புவோர் குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உயரம் 162.5 செண்டிமீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம், பேட்ஜ் வாகன உரிமம் வைத்துள்ள 24 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் அப்பணியில் சேரலாம். ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தது 3 ஆண்டுகளும், பேட்ஜ் உரிமம் பெற்று ஓராண்டும் நிறைவு செய்திருக்க வேண்டும். மாத ஊதியம்: ரூ.15235/- (மொத்த ஊதியம்) வழங்கப்படும்.  

திருவல்லிக்கேணி கஸ்தூர்பா மருத்துவமனை வளாகத்தில் நாளை (28.01.2023) காலை 10 மணி முதல் எழுத்துத் தேர்வு, மருத்துவத் தேர்வு, நேர்முகத் தேர்வுகள் நடைபெறவுள்ளன. அசல் சான்றிதழ்களுடன் நேரில் சென்று அதில் கலந்துகொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 91541 89341, 91541 89398, 73977 24807 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், தங்களுடைய கல்வி, ஓட்டுனர் உரிமம் மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வரவேண்டும். 

வேலூரில் வேலைவாய்ப்பு முகாம் நாளை காலை 10 மணி முதல் 2 மணி வரை வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி