தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Ind Vs Aus: இந்தக் கூட்டணியை பிரிக்க போராடும் இந்திய பவுலர்ஸ்! 300ஐ கடந்த ஆஸி.,

IND Vs AUS: இந்தக் கூட்டணியை பிரிக்க போராடும் இந்திய பவுலர்ஸ்! 300ஐ கடந்த ஆஸி.,

Manigandan K T HT Tamil

Mar 10, 2023, 11:58 AM IST

Border-Gavaskar Trophy: டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த ஆஸி., 4 விக்கெட் இழப்புக்கு 119 ஓவர்களில் 347 ரன்களை குவித்துள்ளது. (REUTERS)
Border-Gavaskar Trophy: டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த ஆஸி., 4 விக்கெட் இழப்புக்கு 119 ஓவர்களில் 347 ரன்களை குவித்துள்ளது.

Border-Gavaskar Trophy: டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த ஆஸி., 4 விக்கெட் இழப்புக்கு 119 ஓவர்களில் 347 ரன்களை குவித்துள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 4வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் நடைபெற்று வருகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Olympic: ‘நாங்கள் நேரத்தை மேம்படுத்த வேண்டும்’: இந்திய ஆண்கள் 4x400 மீட்டர் ரிலே குழு பிளேயர் ராஜீவ் ஆரோக்கியா

Federation Cup 2024: ஃபெடரேஷன் கோப்பை 2024 போட்டியில் ஈட்டி எறிதல் வீரர்கள் நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா பங்கேற்பு

FIFA WC 26 qualifiers: இரண்டாவது பட்டியலை வெளியிட்டார் இந்திய தலைமைப் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக்

Madrid Open Tennis: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி: முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ரூப்லேவ்

டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த ஆஸி., 4 விக்கெட் இழப்புக்கு 119 ஓவர்களில் 347 ரன்களை குவித்துள்ளது.

நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா சதம் விளாசினார்.

டிராவிஸ் ஹெட் 32 ரன்களிலும், கேப்டன் ஸ்மித் 38 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

பீட்டர் ஹேண்ட்கோம் 17 ரன்களில் நடையைக் கட்டினார். கேமரூன் கிரீன், உஸ்மான் கவாஜா ஆகியோர் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. காலை முதலே இந்திய பவுலர்கள் எவ்வளவோ முயற்சி செய்து இன்னும் ஒரு விக்கெட்டைக் கூட கைப்பற்ற முடியவில்லை.

உஸ்மானும், கிரீனும் நிலைத்து நின்று விளையாடி வருகின்றனர். உஸ்மான் கவாஜா 354 பந்துகளில் 150 ரன்களை தொட்டார்.

கேமரூன் கிரீன் 95 ரன்கள் எடுத்து சதத்துக்கு குறிவைத்துள்ளார்.

கேமரூன் கிரீன், கவாஜா

இருவரது பார்ட்னர்ஷிப்பும் அபாரமாக இருந்து வருகிறது. இவர்களது பார்ட்னர்ஷிப்பை உடைப்பது இப்போதைய தேவையாக இருக்கிறது.

உணவு இடைவேளையின்போது ஆஸி., அணி 347 ரன்களை எடுத்துள்ளது.

டாபிக்ஸ்