தமிழ் செய்திகள்  /  Sports  /  Fifa World Cup 2022: Netherland And Senegal Qualified For Knockout Round

FIFA world cup 2022: நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறிய செனகல், நெதர்லாந்து

Nov 30, 2022, 01:10 PM IST

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ், பிரேசில், போர்ச்சுகல் ஆகிய மூன்று அணிகளை தொடர்ந்து குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள செனகல், நெதர்லாந்து அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 என்று அழைக்கப்படும் நாக்அவுட் சுற்றுக்கு இதுவரை 7 அணிகள் தகுதி பெற்றுள்ளன. முதல் அணியாக பிரான்ஸ் தகுதி பெற்ற நிலையில், இதற்கு அடுத்தபடியாக பிரேசில், போர்ச்சுகல் அணிகள் தகுதி பெற்றன.

ட்ரெண்டிங் செய்திகள்

Olympic Qualifiers: ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பங்கேற்க சர்வதேச பயிற்சி: நன்றி தெரிவித்த ஃபென்சர் தனிக்ஷா

Olympic 2024: முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து உள்பட 5 பிளேயர்ஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி

April Sports Rewind: செஸ் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த குகேஷ், அனல் பறந்த ஐபிஎல்.. ஸ்போர்ட்ஸில் முக்கிய நிகழ்வுகள்

Archer Deepika Kumari: வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி ஒலிம்பிக்கிற்கான TOPS திட்டத்தில் மீண்டும் சேர்ப்பு

இந்த அணிகளை தொடர்ந்து தற்போது குரூப் பிரிவில் அனைத்து போட்டிகளையும் விளையாடி முடித்து குரூப் ஏ பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்த செனகல், நெதர்லாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன.

செனகல் - ஈகுவேடார் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் செனகல் அணி வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 44வது நிமடத்தில் சார், 70வது நிமிடத்தில் கூலிபாலி ஆகியோர் செனகல் அணிக்காக கோல் அடித்தனர்.

ஆட்டத்தின் 67வது நிமிடத்தில் ஈகுவேடார் வீரர் மொய்சஸ் கைசெடோ தனது அணிக்காக கோல் அடித்தார். இந்த தொடரில் முதல் போட்டியில் பங்கேற்ற ஈகுவேடார் கத்தார் அணியை வீழ்த்தியது. நெதர்லாந்து, செனகல் அணிகளுக்கு எதிராக தோல்வியை தழுவிய நிலையில் தொடரை விட்டு வெளியேறியது.

இதைத்தொடர்ந்து நெதர்லாந்து - கத்தார் இடையிலான போட்டியில் 2-0 என்ற கணக்கில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்றது.

அந்த அணிக்கு ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் காக்போ, 49வது நிமிடத்தில் டி ஜாங்க் ஆகியோரின் மூலம் கோல் கிடைத்தது. குரூப் ஏ பிரிவில் 2 வெற்றிகளுடன் 7 புள்ளிகளை பெற்று முதல் இடம் பிடித்த நெதர்லாந்து நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

டாபிக்ஸ்