தமிழ் செய்திகள்  /  Sports  /  England Won The First Test Against Pakistan

England win the first Test: சொல்லி அடித்த கில்லி… பாகிஸ்தானை வென்ற இங்கிலாந்து!

Dec 05, 2022, 06:57 PM IST

Eng vs Pak 1st Test Result: இதன் மூலம் 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இத்தொடரில், முன்னிலை வகிக்கிறது.

17 ஆண்டுகளுக்குப் பின் பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ள பென் ஸ்டோக் தலைமையிலான இங்கிலாந்து அணி, பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Olympic 2024: முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து உள்பட 5 பிளேயர்ஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி

April Sports Rewind: செஸ் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த குகேஷ், அனல் பறந்த ஐபிஎல்.. ஸ்போர்ட்ஸில் முக்கிய நிகழ்வுகள்

Archer Deepika Kumari: வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி ஒலிம்பிக்கிற்கான TOPS திட்டத்தில் மீண்டும் சேர்ப்பு

Chennaiyin FC: சென்னையின் எஃப்சி கேப்டனாக 2025 வரை நீடிக்கப்போவது இந்தப் பிளேயர் தான்!

டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ், சிறப்பாக அமைந்தது. துவக்க ஆட்டக்காரர்கள் ஜக் க்ராவ்லி மற்றும் பென் டக்கெட் ஆகியோர் சதம் விளாசி ஆட்டமிழக்க, அதன் பின் வந்த ஓலி ஃபாப் தனது பங்கிற்கு சதம் அடிக்க, ஹாரிக் ப்ராக்கும் ஒரு சதம் அடிக்க, ஒரு நாளில் 4 வீரர்களின் சதத்தோடு இங்கிலாந்து இமாலய ஸ்கோர் எடுத்தது.

முதன் இன்னிங்ஸில் 101 ஓவர்களை சந்தித்த இங்கிலாந்து அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 657 ரன்கள் எடுத்தது.

பெரிய இலக்கை எட்ட வேண்டிய கட்டாயத்தில் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு, அந்த அணியின் துவக்க வீரர்கள் அப்துல்லா ஷபீக் மற்றும் இமாம் உல் ஹக் ஆகியோரின் சதம் ஆக்ரோஷமான துவக்கத்தை தந்தது.

நான்காவது வீரராக களமிறங்கிய பாபர் அசாமும் ஒரு சதம் அடிக்க, கிட்டத்தட்ட இங்கிலாந்து அணியின் ஸ்கோரை நெருங்கிக் கொண்டிருந்தது பாகிஸ்தான். ஒரு கட்டத்தில் விக்கெட் விழ ஆரம்பிக்க, 155.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான், முதன் இன்னிங்ஸில் 579 ரன்கள் எடுத்தது.

78 ரன்கள் முன்னிலை உடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு, இந்த முறை துவக்கம் கொஞ்சம் சரிவாகவே இருந்தது. இருப்பினும், ஜாக் க்ராவ்லி, ஜோ ரூட், ஹாரி ப்ரோக், ஆகியோரின் அரை சதத்தால், 35.5 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி, 264 ரன்களுக்கு டிக்ளர் செய்தது.

343 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கோடு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்குக்கும் துவக்கம் முதல் சரிவு ஏற்பட்டது. சீரான திசையில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தன. சாத் ஷகில் மட்டும் 76 ரன்கள் எடுத்து அரை சதம் கடந்தார்.

|#+|

இமாம் உல் அக் 48, அசார் அலி 40, முகமது ரிஸ்வான் 46, அஹா சல்மான் 30 என சராசரி ரன்களை இவர்கள் எடுத்தாலும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், 96.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி, 268 ரன்களுக்கு ஆல் அவட் ஆனது.

இதன் மூலம் 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இத்தொடரில், முன்னிலை வகிக்கிறது.

டாபிக்ஸ்