தமிழ் செய்திகள்  /  Sports  /  44th Chess Olympiad Medal Winners Details

செல் ஒலிம்பியாடில் பதக்கம் வென்றவர்களின் விவரம்…

Aug 10, 2022, 02:23 PM IST

செஸ் ஒலிம்பியாட் தொடர் கோலகலமாக நடைபெற்று முடிவுற்ற நிலையில், இதில் பதக்கம் வென்ற வீரர்கள், வீராங்கனைகள் பற்றிய தகவல்களை காணலாம்.
செஸ் ஒலிம்பியாட் தொடர் கோலகலமாக நடைபெற்று முடிவுற்ற நிலையில், இதில் பதக்கம் வென்ற வீரர்கள், வீராங்கனைகள் பற்றிய தகவல்களை காணலாம்.

செஸ் ஒலிம்பியாட் தொடர் கோலகலமாக நடைபெற்று முடிவுற்ற நிலையில், இதில் பதக்கம் வென்ற வீரர்கள், வீராங்கனைகள் பற்றிய தகவல்களை காணலாம்.

44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தொடங்கி ஜூலை 28ஆம் தொடங்கி நேற்றுடன் (ஆகஸ்ட் 9) முடிவடைந்தது.

ட்ரெண்டிங் செய்திகள்

Olympic 2024: முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து உள்பட 5 பிளேயர்ஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி

April Sports Rewind: செஸ் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த குகேஷ், அனல் பறந்த ஐபிஎல்.. ஸ்போர்ட்ஸில் முக்கிய நிகழ்வுகள்

Archer Deepika Kumari: வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி ஒலிம்பிக்கிற்கான TOPS திட்டத்தில் மீண்டும் சேர்ப்பு

Chennaiyin FC: சென்னையின் எஃப்சி கேப்டனாக 2025 வரை நீடிக்கப்போவது இந்தப் பிளேயர் தான்!

இதன் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இதையடுத்து இந்தியாவில் முதல் முறையாக நடைபெற்ற இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஒபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கம் வென்றது. அர்மேனியா நாட்டுக்கு வெள்ளிப்பதக்கமும், இந்தியாவும் வெண்கலமும் கிடைத்தது. இந்த பதக்கங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெற்றியாளர்களிடம் வழங்கினார்.

அதேபோல் பி பிரிவில் இந்திய அணியை சேர்ந்த குகேஷ், சரின் நிகல், பிரக்ஞானந்தா, சத்வானி ரெளனக் ஆகியோர் வெண்கலம் வென்றனர்.

மகளிர் பிரிவில் உக்ரைன் அணியை சேர்ந்த முசிச்சுக் மரியா, முசிச்சுக் அன்னா, உஷெனினா அன்னா, புக்ஸா நடாலியா ஆகியோர் தங்கம் வென்றனர். ஜார்ஜியாவின் டிசக்னிட்ஸ் நானா, பாட்சியாஷ்விலி நினோ, ஜவகிஷ்விலி லேலா, அரபிட்ஸே மேரி ஆகியோர் வெள்ளி வென்றனர்.

இந்திய மகளிர் ஏ அணியை சேர்ந்த கோனேரு ஹம்பி, வைஷாலி, தானியா சச்தேவ், குல்கர்னி பக்தி ஆகியோர் வெண்கலம் வென்றனர்.

தனி நபர் பிரிவில் குகேஷ், நிகால் சரின் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். இதேபோல் தனிநபர் பிரிவில் சிறந்த விளங்கிய பல்வேறு வீரர்கள், வீராங்கனைகளுக்கும் பதக்கம் வழங்கப்பட்டது.