தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  'பெண் போன்று நடித்து இன்ஸ்டாவில் உடற்பயிற்சி ஆலோசனை' பலே கில்லாடி இளைஞர் கைது

'பெண் போன்று நடித்து இன்ஸ்டாவில் உடற்பயிற்சி ஆலோசனை' பலே கில்லாடி இளைஞர் கைது

Karthikeyan S HT Tamil

Apr 13, 2023, 01:32 PM IST

Puducherry Crime: ஆன்லைன் மூலம் உடற்பயிற்சி அளிப்பதாக பெண்களைப் போன்று நடித்து, பெண்களை ஏமாற்றிய இளைஞர் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டார்.
Puducherry Crime: ஆன்லைன் மூலம் உடற்பயிற்சி அளிப்பதாக பெண்களைப் போன்று நடித்து, பெண்களை ஏமாற்றிய இளைஞர் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டார்.

Puducherry Crime: ஆன்லைன் மூலம் உடற்பயிற்சி அளிப்பதாக பெண்களைப் போன்று நடித்து, பெண்களை ஏமாற்றிய இளைஞர் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரியில் பெண் உடற் பயிற்சி மாஸ்டர் போன்று, இன்ஸ்டாகிராமில் பல்வேறு பெண்களிடம் ஒருவர் பேசி வந்துள்ளார். அவர் அந்த பெண்களிடம், உங்கள் புகைப்படங்களை எனக்கு அனுப்பினால், அதை பார்த்து உங்கள் உடல் அமைப்புக்கு தகுந்தாற்போல் உடற்பயிற்சி மேற்கொள்ள ஆலோசனைகளை கூறுவேன் என்று தெரிவித்துள்ளார். 

ட்ரெண்டிங் செய்திகள்

Taapsee Pannu: ‘கடமையே முக்கியம்’-நடிகை டாப்ஸியை பொருட்படுத்தாமல் பணிக்கு முக்கியத்துவம் தந்த ஸ்விக்கி ஊழியர்!

Iranian President killed in chopper crash: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

Fact Check: 'ஆந்திராவில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்'.. போலி கருத்து கணிப்பு பரப்பப்பட்டது அம்பலம் - உண்மை என்ன?

World Bee Day 2024: உலக தேனீக்கள் தினத்தின் முக்கியத்துவம், வரலாறு பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்..!

இதை நம்பி பலரும் தங்களது புகைப்படங்களை அவருக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் அவர்,பெண்களுக்கு சில உடற்பயிற்சி டிப்ஸ்களை பரிந்துரை செய்துள்ளார்.

இந்நிலையில் திடீரென அவர், மற்றொரு இன்ஸ்டாகிராம் ஐடி மூலமாக அந்த பெண்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர், ஆடைகள் இல்லாமல் வீடியோ காலில் தன்னுடன் பேச வேண்டும். இல்லையென்றால் அவர்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் சிலர் புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் கீர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் போலீஸாருக்கு அதிர்ச்சியான தகவல் கிடைத்தது. ஆன்லைன் மூலம் பெண்களுக்கு உடற்பயிற்சி அளிப்பதாக கூறியவர் பெண் உடற்பயிற்சி மாஸ்டர் இல்லை என்பதும், அவர் முத்தியால்பேட்டையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் திவாகர் (22) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து திவாகரை போலீஸார் கைது செய்தனர். மேலும், வேறு ஏதாவது பெண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் திவாகரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி