தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Viral Video: கோர்ட் வளாகத்திற்குள் ஆபாசமாக நடனமாடிய இளம்பெண் - வைரல் வீடியோ

Viral Video: கோர்ட் வளாகத்திற்குள் ஆபாசமாக நடனமாடிய இளம்பெண் - வைரல் வீடியோ

Karthikeyan S HT Tamil

Mar 13, 2023, 11:09 AM IST

டெல்லி பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் இளம்பெண் ஆபாச நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லி பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் இளம்பெண் ஆபாச நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

டெல்லி பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் இளம்பெண் ஆபாச நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வட மாநிலங்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஹோலிப் பண்டிகை கடந்த வாரம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையின் போது ஒருவருக்கொருவர் முகத்தில் வண்ணப்பொடிகளை தூவி அன்பை வெளிப்படுத்தி, ஹோலி வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வது வழக்கம். டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் வண்ணப் பொடிகளுடன் இளைஞர்கள், இளம் பெண்கள் ஹோலி பண்டிகையை வெகுவிமர்சையாக கொண்டாடினர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Swift 2024: மாருதி சுசுகி ஸ்விஃப்ட் 2024 மாடல் இந்தியாவில்அறிமுகம்: விலை எவ்வளவு, பிற அம்சங்களை அறிவோம் வாங்க

Sandeshkhali case: சந்தேஷ்காலி வழக்கில் திடீர் திருப்பம்.. பாலியல் வன்கொடுமை புகாரை வாபஸ் பெற்ற பெண்

Bengaluru:பெங்களூருக்கு மஞ்சள் எச்சரிக்கை: இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Indian Army: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: 40 மணி நேரம் நீடித்த என்கவுன்டர் முடிந்தது: இந்திய ராணுவம்

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்தில் புதுடெல்லி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் ஹோலி கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த மார்ச் 6 ஆம் தேதி அன்று இந்த ‘ஹோலி மிலன் விழா’ நடைபெற்றது.

இந்த விழா மேடையில் சினிமா பாடலுக்கு பெண் ஒருவர் ஆபாச நடனம் ஆடியது கடும் சர்ச்சையை கிளப்பியது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைளியாகி வைரலாகி பலரின் கவனத்திற்கு வந்த நிலையில் டெல்லி உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நீதிமன்ற வளாகத்திற்குள் இதுபோன்ற நடன நிகழ்ச்சிகள் முறையற்றது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், நீதிமன்ற அமைப்பு குறித்த எண்ணத்தை இதுபோன்ற நிகழ்ச்சிகள் சீர் குலைத்துவிடும் என்றும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்க வழக்கறிஞர் அமைப்பிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், கூட்டமைப்பு செயலுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்