தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Trending News For National And World On August 16

சபரிமலை நடை திறப்பு, போதை பொருள் பறிமுதல் - முக்கிய செய்திகள் (ஆக.16)

Karthikeyan S HT Tamil

Aug 16, 2022, 06:22 PM IST

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு, குஜராத்தில் 513 கிலோ போதை பொருள் பறிமுதல் உள்பட பல முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு, குஜராத்தில் 513 கிலோ போதை பொருள் பறிமுதல் உள்பட பல முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு, குஜராத்தில் 513 கிலோ போதை பொருள் பறிமுதல் உள்பட பல முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

  • பிகார் மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. அதில், 31 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
  • தலைநகர் தில்லியில் இதுவரை கிட்டத்தட்ட 180 பேருக்கு டெங்கு காய்ச்சல் பதிவாகியுள்ளதாக தில்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது.
  • ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் இந்தோ - திபெத் படையினர் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 வீரர்கள் உயிரிழந்தனர்.
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 4ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி குடிரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
  • நவீன உளவு வசதிகளை கொண்ட சீனாவின் யுவான் வாங்-5 கப்பலானது இன்று இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்தடைந்தது.
  • குஜராத்தில் ரூ. 1,026 கோடி மதிப்பிலான 513 கிலோ போதைப் பொருள்களை மும்பை போதைப்பொருள் தடுப்பு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
  • மகாராஷ்டிரத்தில் பெண் காவலர் ஒருவர் காவல் நிலையத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • ஜம்மு-காஷ்மீர், பஹல்காம் பகுதியில் நடந்த விபத்தில் பாதுகாப்புப் படையினர் 6 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
  • சத்தீஸ்கரில் பாஸ்டர் ஃபைட்டர்ஸ் என்றழைக்கப்படும் நக்சல் எதிர்ப்பு படைக்கு 9 திருநங்கைகள் தேர்வாகியுள்ளனர்.
  • ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.
  • மத்திய பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில், கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்ட நிலையில், குடியிருப்பு பகுதிக்குள் முதலை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
  • குஜராத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அமுல் நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியதுடன், பால் பொருட்களின் விலையையும் உயர்த்தி இருக்கிறது.
  • உக்ரைன், தைவான் நாடுகள் சந்திக்கும் பிரச்னைக்கு அமெரிக்காதான் காரணம் என ரஷ்ய அதிபர் புதின் குற்றம் சாட்டியுள்ளார்.
  • உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரியில் சரக்கு வாகனம் ஒன்று சாலையோர வீட்டின் மீது மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
  • தில்லி அரசின் மாதிரியைப் பயன்படுத்தி உலகின் முதல் நாடாக மாற்ற வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
  • ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை ஏமாற்றிய காதலனை பழிவாங்கும் நோக்கில் செய்தித்தாளில் முழு பக்க விளம்பரம் கொடுத்துள்ளார்.
  • உத்தரப்பிரதேசத்தில், நீதிமன்றத்தின் வெளியே விசாரணைக் கைதியை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • கர்நாடக மாநிலம் சிவமோகா வன்முறைச்சம்பவத்தில் இளைஞரைக் கத்தியால் குத்திய நபரை காலில் சுட்டு போலீஸார் சிறைபிடித்தனர்.
  • மும்பையில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
  • கடந்த 2002ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பை தொடர்ந்து நடந்த கலவரத்தின்போது, 5 மாத கர்ப்பிணி பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், தண்டிக்கப்பட்ட 11 பேருக்கும் பொது மன்னிப்பு வழங்கி குஜராத் அரசு விடுதலை செய்துள்ளது.
  • நாடு முழுவதும் ஒரேநாளில் மேலும் 8,813 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • கர்நாடகாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
  • சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆவணி மாத பூஜைக்காக கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது.
  • திருப்பதியில் இலவச தரிசன பக்தர்களுக்கு அதிக முன்னுரிமை அளித்து சாமி தரிசனத்துக்கு அனுப்பி வைக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Hemant Soren: அமலாக்கத்துறை கைதை எதிர்த்து ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு: ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் தள்ளுபடி

Dubai weather: ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை, விமானங்கள் ரத்து.. வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி

Gujarat: ஓரினச்சேர்க்கையால் வந்த வினை.. பார்சல் அனுப்பி காதலியின் கணவர், மகளை கொன்ற பெண்! - குஜராத்தில் பயங்கரம்!

Press Freedom Day 2024: பத்திரிகை சுதந்திர தின வரலாறு, முக்கியத்துவம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்

டாபிக்ஸ்