தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Top 10 News: கடலூரில் கல்வீச்சு.. பதற்றம் முதல் அமித்ஷா வருகை உள்ளிட்ட முக்கிய செய்திகள்!

Top 10 News: கடலூரில் கல்வீச்சு.. பதற்றம் முதல் அமித்ஷா வருகை உள்ளிட்ட முக்கிய செய்திகள்!

Jul 27, 2023, 08:03 AM IST

கடலூர் நகர் பகுதியில் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர்களுக்கும் மட்டும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கல் எரிந்த விவகாரத்தில் தொடர்புடைய பாமகவை சேர்ந்த அறிவழகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் நகர் பகுதியில் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர்களுக்கும் மட்டும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கல் எரிந்த விவகாரத்தில் தொடர்புடைய பாமகவை சேர்ந்த அறிவழகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடலூர் நகர் பகுதியில் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர்களுக்கும் மட்டும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கல் எரிந்த விவகாரத்தில் தொடர்புடைய பாமகவை சேர்ந்த அறிவழகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

• என்எல்சி விவகாரத்தில் கடலூரில் பதற்றம் நிலவுகிறது. கடலூர் மாவட்டத்தில் மட்டும் 16 பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. கடலூர் நகர் பகுதியில் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர்களுக்கும் மட்டும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கல் எரிந்த விவகாரத்தில் தொடர்புடைய பாமகவை சேர்ந்த அறிவழகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Bibhav Kumar: ஆம் ஆத்மி எம்.பி.மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு: கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைதும் பின்னணியும்!

Heatwave Warning: வரும் மே 21ஆம் தேதி வரை புதிய வெப்ப அலைவீசும்: இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை

Prashant Kishore: ’பாஜகதான் ஆட்சி அமைக்கும்! மோடியை வீழ்த்தனும்னா இதை பண்ணுங்க!’ பிரசாந்த் கிஷோர் பேட்டி

Election 2024: ’இத்தாலி நாட்டின் சோனியா காந்தியை போல் மோடி இந்தி தெரியாதவர் அல்ல!’ பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கிண்டல்!

•திருப்பதி சீனிவாச சேது மேம்பால கட்டுமான பணியின்போது கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் 2பேர் மரணம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

• தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 27) பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி பெட்ரோல் விலை ரூ.102.63, டீசல் ரூ.94.24 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாட்டின் பிற நகரங்களிலும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

•எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 7.5% இட ஒதுக்கீட்டில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று சென்னையில் நடைபெறுகிறது. இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் 473 எம்பிபிஎஸ் இடங்களும், பிடிஎஸ் படிப்பிற்கு 133 இடங்களும் உள்ளன.

• அமலாக்கத்துறை இயக்குநர் பதவியை நீட்டிக்க கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை

• என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய உயர்வு உள்ள 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

• உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வருகிறார். 2 நாள் பயணமாக வரும் அமித்ஷா என் மண் என் மக்கள் என்ற அண்ணாமலையின் பாதயாத்திரையை துவக்கி வைக்கிறார். ஜூலை 29ம் தேதி ராமேஸ்வரத்தில் சாமி தரிசனம் செய்பவர் விவேகானந்தர் நினைவில்லம், அப்துல்கலாம் அருங்காட்சியகம் ஆகியவற்றை பார்வையிடுகிறார்.

•மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் இந்திய பொருளாதாரம் உலக அளவில் 3 இடங்களுக்குள் கொண்டு வரப்படும் என தில்லியில் நடந்த சர்வதேச கண்காட்சியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி தெரிவித்தார்.

•ஒகேனக்கலில் காவிரி நீர் வரத்து 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. பரிசல் இயக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

•இன்று இரவு 7 மணிக்கு - மேற்கு இந்திய தீவுகள் - இந்தியா மோதும் முதல் ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி