தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Netherlands: கடற்கரையில் காதலர்கள் உல்லாசம் - தடை விதித்து அதிரடி உத்தரவு

Netherlands: கடற்கரையில் காதலர்கள் உல்லாசம் - தடை விதித்து அதிரடி உத்தரவு

Jun 12, 2023, 10:42 AM IST

கடற்கரைப் பகுதியில் காதலர்கள் உல்லாசமாக இருக்கத் தடை விதித்து நெதர்லாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.
கடற்கரைப் பகுதியில் காதலர்கள் உல்லாசமாக இருக்கத் தடை விதித்து நெதர்லாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.

கடற்கரைப் பகுதியில் காதலர்கள் உல்லாசமாக இருக்கத் தடை விதித்து நெதர்லாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.

 

ட்ரெண்டிங் செய்திகள்

Taapsee Pannu: ‘கடமையே முக்கியம்’-நடிகை டாப்ஸியை பொருட்படுத்தாமல் பணிக்கு முக்கியத்துவம் தந்த ஸ்விக்கி ஊழியர்!

Iranian President killed in chopper crash: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

Fact Check: 'ஆந்திராவில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்'.. போலி கருத்து கணிப்பு பரப்பப்பட்டது அம்பலம் - உண்மை என்ன?

World Bee Day 2024: உலக தேனீக்கள் தினத்தின் முக்கியத்துவம், வரலாறு பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்..!

நெதர்லாந்து உயிரே நகரில் புகழ்பெற்ற கடற்கரை அமைந்துள்ளது. இளம் காதலர்களின் சொர்க்கமாகத் திகழும் இந்த கடற்கரையில் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் இந்த கடற்கரைக்கு ஏராளமான காதல் ஜோடிகள் வந்து கூடுவார்கள்.

அதேசமயம் இந்த கடற்கரைக்கு வரும் காதலர்கள் தனிமையில் நெருக்கமாக அமர்ந்து உல்லாசத்தில் ஈடுபடுவதும் உண்டு. சில காதலர்களும் தங்களை மறந்து அத்துமீறுவதும் உண்டு. உன் பக்கத்தில் யார் இருந்தாலும் கவலைப்படாமல், காதலர்கள் நிர்வாணமாக உல்லாசத்தில் ஈடுபடுவார்கள்.

கடற்கரைக்கு அருகில் இருக்கக்கூடிய சிறு குன்றுகளைக் கூட கடற்கரைக்கு வரக்கூடிய காதலர்கள் விடுவதில்லை. அவர்கள் அனைவரும் ஜாலியாக இருப்பார்கள். காதலர்கள் மட்டுமல்லாது இந்த கடற்கரைக்குப் பொழுது போக்குவதற்காகக் குழந்தைகளுடன் பல பெற்றோர்கள் வருகின்றனர்.

அங்கு வரக்கூடிய பொதுமக்கள் காதலர்களின் செயல்களைப் பார்த்து முகம் சுழித்துச் செல்கின்றனர். கடற்கரையைப் படுக்க அறையாக மாற்றும் இளம் காதலர்கள் இந்த அத்துமீறல் குறித்து வீரே நகர் மாநகராட்சிக்கு அடுக்கடுக்கான புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்துள்ளன.

இதனை அடுத்து வீரே நகர் கடற்கரைப் பகுதியில் காதல் ஜோடிகினர் உல்லாசமாக இருக்க தற்போது நெதர்லாந்து அரசு தடை விதித்துள்ளது. தற்போது கடற்கரை பகுதியில் இது போன்ற எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் தடையை மீறி யாராவது கடற்கரையில் உல்லாசமாக இருந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடையால் கடற்கரையில் நிர்வாணமாக சன் பாத் எடுக்க வரும் சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொது இடங்களில் நாங்கள் உல்லாசமாக இருப்பதில்லை, உடல் ஆரோக்கியத்திற்காக சன் பாத் எடுக்க வருகிறோம் இவர்களால் நாங்களும் பாதிக்கப்பட்டுள்ளோம் என சன் பாத் எடுக்க வரும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

டாபிக்ஸ்

அடுத்த செய்தி