தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  மருத்துவ மாணவி பலி; இணையத்தில் வைரலாகிவரும் Justice For Preethi ஹேஷ்டேக்

மருத்துவ மாணவி பலி; இணையத்தில் வைரலாகிவரும் Justice for preethi ஹேஷ்டேக்

Manigandan K T HT Tamil

Feb 27, 2023, 02:03 PM IST

Telangana: தெலங்கானா அரசு அவரது குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. (@headachebaby)
Telangana: தெலங்கானா அரசு அவரது குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.

Telangana: தெலங்கானா அரசு அவரது குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.

தெலங்கானாவில் PG மருத்துவ மாணவி ப்ரீத்தி (26), சீனியரின் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Heatwave Warning: வரும் மே 21ஆம் தேதி வரை புதிய வெப்ப அலைவீசும்: இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை

Modi vs Rahul Gandhi: ‘நான் எழுதி தர்றேன்! மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார்!’ ரேபரேலியில் ராகுல் காந்தி பேச்சு!

Prashant Kishore: ’பாஜகதான் ஆட்சி அமைக்கும்! மோடியை வீழ்த்தனும்னா இதை பண்ணுங்க!’ பிரசாந்த் கிஷோர் பேட்டி

Election 2024: ’இத்தாலி நாட்டின் சோனியா காந்தியை போல் மோடி இந்தி தெரியாதவர் அல்ல!’ பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கிண்டல்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்நிலையில், அவருக்கு நீதி கேட்டு justice for Preethi என்ற ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட்டாக்கி போராடி வருகின்றனர்.

தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சயிஃப் என்பவர் மருத்துவ கல்லூரி மாணவி ப்ரீத்தியை வார்த்தைகளால் துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மாணவி ப்ரீத்தி, நிஜாம் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் சிகிச்சையில் இருந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இரவு உயிரிழந்தார். நேற்றிரவு 9.10 மணிக்கு மாணவி ப்ரீத்தி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

என்ன நடந்தது?

மாணவி ப்ரீத்தியை சயிஃப் என்ற சீனியர் வார்த்தைகளால் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதுதொடர்பாக மாணவி ப்ரீத்தியின் தந்தை நரேந்தர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அனஸ்தீசியா பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்துவருபவர் தான் மருத்துவர் சயிஃப். இவர் ப்ரீத்தியை சிறுமைப்படுத்தும் வகையில் சில கருத்துகளை இன்ஸ்டன்ட் மெசேஜ் தளத்தில் பதிவிட்டதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்தே ப்ரீத்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.

கைது

சயிஃப் ஆதரவாக சில மாணவர்கள் முன்வந்தபோதிலும், போலீஸார் அவரை கைது செய்தனர். தற்போது உயிரிழந்த ப்ரீத்திக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் இணையவழி போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக #justiceforpreethi என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

நிதியுதவி

இதனிடையே, தெலங்கானா அரசு அவரது குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி