தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Crime: பட்டப்பகலில் வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை.. ராஜஸ்தானில் பரபரப்பு

Crime: பட்டப்பகலில் வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை.. ராஜஸ்தானில் பரபரப்பு

Manigandan K T HT Tamil

Feb 09, 2023, 12:06 PM IST

Bank robbery in Dholpur: ராஜஸ்தானின் தோல்பூரில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் பணத்தை கொள்ளையடித்தவர்களில் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
Bank robbery in Dholpur: ராஜஸ்தானின் தோல்பூரில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் பணத்தை கொள்ளையடித்தவர்களில் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Bank robbery in Dholpur: ராஜஸ்தானின் தோல்பூரில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் பணத்தை கொள்ளையடித்தவர்களில் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ராஜஸ்தானின் தோல்பூரில் உள்ள வங்கியில் ஆயுதம் ஏந்திய 6 கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து விட்டு தப்பிச் செல்ல முயன்றனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Arvind Kejriwal: அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லி முதல்வர் பதவியில் இருந்து நீக்கக் கோரிய மனு: உச்ச நீதிமன்றத்தின் முடிவு என்ன

Bomb threat for Bengaluru hospital: பெங்களூரு மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு

Flights diverted to Chennai: கனமழை காரணமாக பெங்களூருவில் இருந்து சென்னைக்கு திருப்பி விடப்பட்ட 9 விமானங்கள்

PM Modi Exclusive Interview: இடைக்கால பட்ஜெட்டில் கவர்ச்சி திட்டங்களை அறிவிக்காதது ஏன்? - பிரதமர் மோடி பரபரப்பு விளக்கம்

தகவல் அறிந்து அந்தப் பகுதிக்கு விரைந்து வந்த போலீஸார், அவர்களை விரட்டி பிடிக்க முயன்றனர்.

அப்போது கொள்ளையர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. முடிவில் 3 கொள்ளையர்களை போலீஸார் மடக்கி பிடித்தனர்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ராஜஸ்தானின் தோல்பூர் அருகே மைரானா நகரில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.5லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் கொள்ளையர்கள் தப்பிச் செல்ல முயன்றனர்.

தகவல் கிடைத்ததும் அந்தப் பகுதிக்கு விரைந்து கொள்ளையர்களை விரட்டி பிடிக்க முயன்றோம்.

அப்போது, கொள்ளையர்கள் மூன்று பேர் காவலர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து, நாங்களும் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்தினோம். முடிவில் காயமடைந்த 3 கொள்ளையர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1.45 லட்சம் கைப்பற்றப்பட்டது.

அவர்களை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறோம். எஞ்சிய பணத்துடன் 3 கொள்ளையர்கள் தப்பி ஓடி விட்டனர். அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி