தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Sisodiya Arrest: சிபிஐக்கு அரசியல் அழுத்தம் – அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

Sisodiya Arrest: சிபிஐக்கு அரசியல் அழுத்தம் – அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

Priyadarshini R HT Tamil

Feb 27, 2023, 01:23 PM IST

அரசியல் அழுத்தங்கள் காரணமாக சிசோடியா கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசியல் அழுத்தங்கள் காரணமாக சிசோடியா கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

அரசியல் அழுத்தங்கள் காரணமாக சிசோடியா கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆட்சியில் உள்ளது. கடந்தாண்டு அமல்படுத்தப்பட்ட புதிய மதுபான கொள்கை தனியார் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் இருந்ததாகவும், இதற்கு பிரதிபலனாக பலகோடி ரூபாய் லஞ்சப்பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து மதுபான கொள்கையை ஆம் ஆத்மி அரசு ரத்து செய்தது.

ட்ரெண்டிங் செய்திகள்

Heatwave Warning: வரும் மே 21ஆம் தேதி வரை புதிய வெப்ப அலைவீசும்: இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை

Modi vs Rahul Gandhi: ‘நான் எழுதி தர்றேன்! மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார்!’ ரேபரேலியில் ராகுல் காந்தி பேச்சு!

Prashant Kishore: ’பாஜகதான் ஆட்சி அமைக்கும்! மோடியை வீழ்த்தனும்னா இதை பண்ணுங்க!’ பிரசாந்த் கிஷோர் பேட்டி

Election 2024: ’இத்தாலி நாட்டின் சோனியா காந்தியை போல் மோடி இந்தி தெரியாதவர் அல்ல!’ பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கிண்டல்!

புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தொடர்பிருப்பதாக டெல்லி குற்றம்சாட்டப்பட்டுள்ள டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா நேற்று சிபிஐ முன் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

இதையடுத்து நேற்று அவரிடம் சிபிஐ அதிகாரிகள் 8 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். அதில் அவரிடம் இருந்த கிடைத்த பதிலில் திருப்தியில்லையென்று, அவரை கைது செய்தார்கள். இதற்கு ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்ததுடன். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தது. 

இந்நிலையில், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், சிபிஐ அதிகாரிகளுக்கு அவர்கள் அழுத்தத்தின் காரணமாக இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டார்கள். தங்களின் அரசியல் எஜமானர்களுக்கு கீழ்படவேண்டிய நிலையில் உள்ளார்கள். ஏனெனில் சிபிஐ அதிகாரிகளுக்கு துணை முதல்வர் சிசோடியாக மீது மிகுந்த மரியாதை உள்ளது. அவருக்கு எதிரான ஆதாரங்களும் இல்லை.

 

மணிஷின் கைது சிபிஐ அதிகாரிகளே எதிர்ப்பு தெரிவித்ததாக எனக்கு கிடைத்த தகவல்கள் உறுதிப்படுத்தின. அவர்கள் அனைவருக்கும் சிசோடியா மீது உயர்ந்த மரியாதை வைத்துள்ளார்கள். மேலும் அவருக்கு எதிராக எவ்வித ஆதாரங்களும் இல்லை. ஆனால், அவரை கைது செய்ய வேண்டும் என்ற அரசியல் அழுத்தம் மட்டும் அதிகம் இருந்தது. அவர்கள் தங்களின் அரசியல் தலைவர்களுக்கு அவர்கள் கீழ்படிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக இன்றைய தனது டிவீட்டில் தெரிவித்துள்ளார்.

இது இட்டுக்கட்டி கூறப்படும் கட்டுக்கதை என்று கூறியுள்ள பாஜக எம்பி மனோஜ் திவாரி, குஜராத் தேர்தலின்போது உளவுத்துறை குறித்து இதுபோன்ற போலிச்செய்திகளை பரப்பியதாகவும், இப்போது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது நீங்கள் கூறுவது, எழுதுவது அனைத்தும் இட்டுக்கட்டப்பட்டவை என்றும், சட்டம் தன் கடமையைச் செய்யட்டும். மதுபான அமைச்சரின் மதுபான ஊழல் குறித்த விசாரணை எங்கும் பரவட்டும். இது உங்களின் அச்சம். இல்லையா? என்று பதிலளித்து திவாரி இந்தியில் டிவீட் செய்துள்ளார்.

இதற்கு பின்னூட்டமிட்டுள்ள மற்றொரு நபர் அதானியிடம் இருந்து கவனத்தை திருப்புவதற்காக இந்த கைதை மோடி பயன்படுத்திக்கொள்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு நிறுவனத்தால் கைது செய்யப்பட்டுள்ள இரண்டாவது அமைச்சர் சிசோடியா ஆவார். இது கட்சிக்கு எதிராக அரசியல் சதியின் ஒரு பகுதி என ஆம்ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி