தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Rahul Gandhi To Prove Savarkar Apologized To British Rulers - Grandson Ranjit Savarkar Challenges

என் தாத்தா மன்னிப்பு கேட்டதை நிரூபிக்க முடியுமா? ராகுலுக்கு ரஞ்சித் சாவர்க்கர் சவால்

Kathiravan V HT Tamil

Mar 29, 2023, 10:18 AM IST

Rahul Gandhi About Savarkar: செய்தியார்கள் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி “மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல. நான் ராகுல் காந்தி. யாரிடமும் காந்தி மன்னிப்பு கேட்டதில்லை” என்று பேசி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
Rahul Gandhi About Savarkar: செய்தியார்கள் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி “மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல. நான் ராகுல் காந்தி. யாரிடமும் காந்தி மன்னிப்பு கேட்டதில்லை” என்று பேசி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

Rahul Gandhi About Savarkar: செய்தியார்கள் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி “மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல. நான் ராகுல் காந்தி. யாரிடமும் காந்தி மன்னிப்பு கேட்டதில்லை” என்று பேசி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் போது மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலியில் பங்குடியின மக்கள் மத்தியில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி “அந்தமான் சிறையில் இருக்கும் போது ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு சாவர்க்கர் ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் தனனி விடுவிக்குமாறு மன்றாடி இருந்தார். இதே போல் சாவர்க்கர் ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் பென்ஷன் பெற்றார். சிறையில் இருந்து வந்த பின்னர் அவர் ஆங்கிலேய படைகளில் சேர்ந்தார்” என்று கூறி இருந்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Shashi Tharoor: 'தொலைபேசியில் பேச மக்கள் பயப்படுகிறார்கள்': காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் குற்றச்சாட்டு

Hemant Soren: அமலாக்கத்துறை கைதை எதிர்த்து ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு: ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் தள்ளுபடி

Dubai weather: ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை, விமானங்கள் ரத்து.. வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி

Gujarat: ஓரினச்சேர்க்கையால் வந்த வினை.. பார்சல் அனுப்பி காதலியின் கணவர், மகளை கொன்ற பெண்! - குஜராத்தில் பயங்கரம்!

சாவர்க்கர்

ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் “கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ராகுல் காந்தி தொடர்ந்து என் தாத்தாவை அவமதித்து பேசி வருகிறார். அவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர். ஆனால் வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் கட்சி வீர சாவர்க்கரை அவமதித்து வருகிறது. ராகுல் காந்தி மீது போலீசில் புகார் அளிப்பேன்” என்று கூறி இருந்தார்.

மன்னிப்பு கேட்க என் பெயர் சாவர்க்கர் இல்லை

இந்த நிலையில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது. இதனையெடுத்து செய்தியார்கள் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி “மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல. நான் ராகுல் காந்தி. யாரிடமும் காந்தி மன்னிப்பு கேட்டதில்லை” என்று பேசி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

ராகுலுக்கு சவால் 

ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் சாவர்க்கரின் பேரனான ரஞ்சித் சாவர்க்கர் செய்தியாளர்களிடம் பேசினார். அதில் மன்னிப்பு கேட்க தான் சாவர்க்கர் அல்ல என்று ராகுல் காந்தி கூறி உள்ளார். ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் சாவர்க்கர் மன்னிப்பு கேட்டார் என்பதற்கான ஆவணங்களை காட்டி அதனை நிரூபிக்க வேண்டும் என்று நான் அவருக்கு சவால் விடுகிறேன்.

அவர் செய்வது எல்லாம் குழந்தைத்தனம் போன்று உள்ளது. அரசியலில் முன்னேற வேண்டும் என்பதற்காக, தேசப் பற்றாளர்களின் பெயர்களை அவமதிப்பது ஏற்கத்தக்கதல்ல. ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கூட்டணியில் கருத்து மோதல்

இந்துத்துவா கொள்கையை கொண்ட சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கர் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர். அவர் மீதான ராகுல் காந்தியின் கருத்து காரணமாக மகாராஷ்டிராவில் கூட்டணியில் உள்ள உத்தவ் தாக்ரே கட்சி உடன் காங்கிரஸ் கட்சிக்கு கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்