தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Pm Modi: 'அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவுக்கு முக்கியம்' - பிரதமர் மோடி பேச்சு!

PM MOdi: 'அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவுக்கு முக்கியம்' - பிரதமர் மோடி பேச்சு!

Karthikeyan S HT Tamil

Jul 22, 2023, 11:41 AM IST

Rozgar Mela: ரோஜ்கர் மேளா வேலைவாய்ப்பு மூலம் 70,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று வழங்கினார்.
Rozgar Mela: ரோஜ்கர் மேளா வேலைவாய்ப்பு மூலம் 70,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று வழங்கினார்.

Rozgar Mela: ரோஜ்கர் மேளா வேலைவாய்ப்பு மூலம் 70,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று வழங்கினார்.

மத்திய அரசு துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி ரோஜ்கர் மேளா என்ற வேலைவாய்ப்பு திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி தொடங்கிவைத்தார். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 3.5 லட்சம் இளைஞர்களுக்கு மத்திய அரசு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ள நிலையில் 7-வது ரோஜ்கர் மேளா திருவிழா நாடு முழுவதும் 44 இடங்களில் இன்று நடைபெற்றது.

ட்ரெண்டிங் செய்திகள்

Taapsee Pannu: ‘கடமையே முக்கியம்’-நடிகை டாப்ஸியை பொருட்படுத்தாமல் பணிக்கு முக்கியத்துவம் தந்த ஸ்விக்கி ஊழியர்!

Iranian President killed in chopper crash: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

Fact Check: 'ஆந்திராவில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்'.. போலி கருத்து கணிப்பு பரப்பப்பட்டது அம்பலம் - உண்மை என்ன?

World Bee Day 2024: உலக தேனீக்கள் தினத்தின் முக்கியத்துவம், வரலாறு பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்..!

இதன்படி மத்திய அரசுப் பணிகளுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 70,000 பேருக்கு பணி நியமன ஆணையை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக இன்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், "கடந்த ஆட்சியில் நமது நாட்டின் வங்கித்துறை அழிவை சந்தித்தது. ஆனால், உலகளவில் இந்திய வங்கித்துறை வலுவாக உள்ளது. தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனை செய்ய முடிகிறது. 

வளர்ச்சியின் பாதையில் நாடு சென்று கொண்டிருக்கும்போது அரசு ஊழியராக இருப்பது நல்ல வாய்ப்பு. அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவுக்கு மிக முக்கியமான ஆண்டுகளாக இருக்கும். வளர்ச்சியின் பாதையில் நாடு சென்று கொண்டிருக்கும்போது அரசு ஊழியராக இப்பது இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வழங்கியுள்ள பணி நியமன ஆணைகள் மூலம் வருவாய் துறை, நிதித் துறை, அஞ்சல் துறை, பள்ளிக் கல்வித் துறை, உயர் கல்வித் துறை, பாதுகாப்பு அமைச்சகம், சுகாதாரத் துறை, மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், நீர்வளத் துறை, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை மற்றும் உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய ஊழியர்கள் பணியில் சேர உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி