தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Manipur Violence: மணிப்பூர் வன்முறை எதிரொலி.. நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏற்பு

Manipur Violence: மணிப்பூர் வன்முறை எதிரொலி.. நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏற்பு

Jul 26, 2023, 12:51 PM IST

காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோய் புதன்கிழமை அரசுக்கு எதிரான நம்பிக்கைத் தீர்மானத்தை தாக்கல் செய்தார்.
காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோய் புதன்கிழமை அரசுக்கு எதிரான நம்பிக்கைத் தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோய் புதன்கிழமை அரசுக்கு எதிரான நம்பிக்கைத் தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

மத்திய அரசுக்கு எதிராக இரண்டு நம்பிக்கை இல்லா தீர்மானம் மக்களவை சபாநாயகரிடம் கொண்டு வரப்பட்டது.

ட்ரெண்டிங் செய்திகள்

Taapsee Pannu: ‘கடமையே முக்கியம்’-நடிகை டாப்ஸியை பொருட்படுத்தாமல் பணிக்கு முக்கியத்துவம் தந்த ஸ்விக்கி ஊழியர்!

Iranian President killed in chopper crash: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

Fact Check: 'ஆந்திராவில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்'.. போலி கருத்து கணிப்பு பரப்பப்பட்டது அம்பலம் - உண்மை என்ன?

World Bee Day 2024: உலக தேனீக்கள் தினத்தின் முக்கியத்துவம், வரலாறு பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்..!

இந்தியா கூட்டணி சார்பாக காங்கிரஸ் எம்.பியும் மக்களவை துணை தலைவருமான கவுரவ் கோகாய் ஒரு நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளர்.

மேலும் பி.ஆர்.எஸ் கட்சி சார்பில் நமா நாகேஸ்வராவும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது.

மணிப்பூர் பழங்குடி பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச்செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்தியா கூட்டணி சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மான சபாநாயகரிடம் வழங்கப்பட்டது. இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் வழங்கப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீஸில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல், கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட சுமார் எம்.பிக்கைள் கையெழுத்திட்டு தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. திமுக இந்த தீர்மானத்திற்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் அமளியை தொடர்ந்து மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் அவை நடவடிக்கை தொடங்கிய போது மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை விவாதத்திற்கு ஏற்றார் சபாநாயகர் ஓம் பிர்லா.

இதையடுத்து பிரதமர் மணிப்பூர் குறித்த நீண்ட விளக்கம் அளிக்கும் சூழல் உருவாகி உள்ளது. இனி வரும் 10 நாட்களுக்கு இது தொடர்பான நடவடிக்கைகள் நாடாளுமன்றத்தில் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் அரசுக்கு ஆதரவாக 332 எம்பிகள் உள்ளதால் தீர்மானம் வெற்றி பெற வாய்ப்பில்லை. ஆனால் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் மக்களவை 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மாநிலங்களவை நடவடிக்கைகள் தொடர்ந்த போது மணிப்பூர் மணிப்பூர் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர்.

முன்னதாக பிரதமர் மோடி, மணிப்பூரில் நடைபெற்ற சம்பவம் எந்த நாகரீக சமூகத்துக்கும் அவமானகரமானது. மணிப்பூரில் பெண்கள் அவமதிக்கப்பட்ட சம்பவம், இந்தியாவிலுள்ள 140 கோடி மக்களையும் அவமானத்தில் ஆழ்த்தியுள்ளது. மணிப்பூரின் மகள்களுக்கு ஏற்பட்டதை மன்னிக்கவே முடியாது. எந்த குற்றவாளிகளும் தப்பமாட்டார்கள் என நாட்டு மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்’ என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி