தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Liquor Sale: அஸ்ஸாமில் மதுபான விற்பனை மூலம் எத்தனை கோடி வருவாய் தெரியுமா?

Liquor Sale: அஸ்ஸாமில் மதுபான விற்பனை மூலம் எத்தனை கோடி வருவாய் தெரியுமா?

Manigandan K T HT Tamil

Mar 15, 2023, 07:50 PM IST

Assam Government: இதுதவிர, கிராமங்களில் இருந்த பார்களும், வெளிநாட்டு மதுபான கடைகளாக கடந்த 7 ஆண்டுகளில் மாற்றப்பட்டுள்ளன. (HT_PRINT)
Assam Government: இதுதவிர, கிராமங்களில் இருந்த பார்களும், வெளிநாட்டு மதுபான கடைகளாக கடந்த 7 ஆண்டுகளில் மாற்றப்பட்டுள்ளன.

Assam Government: இதுதவிர, கிராமங்களில் இருந்த பார்களும், வெளிநாட்டு மதுபான கடைகளாக கடந்த 7 ஆண்டுகளில் மாற்றப்பட்டுள்ளன.

2016 முதல் 757 புதிய மதுபான உரிமங்கள் அஸ்ஸாமில் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம், அந்த மாநிலத்தில் கலால் வருவாய் ரூ.3,548 கோடியாக உயர்ந்துள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Fact Check : YSRCP வாக்கெடுப்பில் 100% வெற்றி பெறும்’ என சந்திரபாபு நாயுடு கூறினாரா? வைரலாகும் வீடியோ.. நடந்தது என்ன?

Mamata Banerjee: ’மம்தா பானர்ஜி ஜெயித்தால் பாஜகவை ஆதரிப்பார்!’ ஆதிர் ரஞ்சன் பேச்சால் இந்தியா கூட்டணியில் சர்ச்சை!

Fact Check: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் லாரியில் தூக்கிச் செல்லப்படுவதாக வைரலாகும் வீடியோ? – உண்மைத்தன்மை என்ன?

Fact Check: என்னது.. இதுதான் பிரதமர் மோடியின் திருமண போட்டோவா.. வைரலாகி வரும் செய்தியின் உண்மைத்தன்மை என்ன?

இத்தகவலை அந்த மாநில அரசு சட்டசபையில் இன்று தெரிவித்தது.

காங்கிரஸ் எம்எல்ஏ வசந்த தாஸ் எழுப்பிய கேள்விக்கு, கலால் துறை அமைச்சர் பரிமல் சுக்லபாத்யா எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

மொத்தம் 390 பார்களுக்கு புதிய உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. 14 வெளிநாட்டு மதுபான கடைகள் மற்றும் 353 இந்திய மதுபான கடைகள் ஆகியவற்றுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இதுவரை உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுதவிர, கிராமங்களில் இருந்த பார்களும், வெளிநாட்டு மதுபான கடைகளாக கடந்த 7 ஆண்டுகளில் மாற்றப்பட்டுள்ளன.

கலால் மூலம் கிடைக்கப் பெற்ற வருவாய் ரூ.3548.31 கோடியாகும். மொத்தம் ரூ.1,433.01 கோடி இந்த நிதியாண்டில் பிப்ரவரி வரை கிடைக்கப் பெற்றுள்ளது.

2017-18ல் ரூ.1,699.36 கோடியும், 2018-19ல் ரூ.2,204.15 கோடியும், 2019-20ல் ரூ.2,606.68 கோடியும், 2020-21ல் ரூ.2,977.61 கோடியும், 2020-21ல் ரூ.3,047.928 கோடியும் கிடைக்கப் பெற்றது.

அதுமட்டுமல்லாமல், பல்வேறு விதிகளை மீறியதற்காக 2018-19 முதல் 1.18 கோடி ரூபாய் அபராதமாக கலால் துறை வசூலித்துள்ளது என்று சுக்லபாத்யா கூறினார்.

மேலும், "அஸ்ஸாம் அரசு 2018 இல் அஸ்ஸாம் கலால் சட்டத்தில் திருத்தம் செய்து ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் சட்டம் வலுப்பெற்றது. சட்டவிரோத மதுபான விற்பனைகளுக்கு எதிராக 69,498 வழக்குகளை பதிவு செய்து 18,634 பேர் கைது செய்யப்பட்டனர்," என்றார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி