தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Google Bard Ai: Chatgptக்கு போட்டியாக கூகுள் Bard! தெரிந்து கொள்ள வேண்டியவை

Google Bard AI: ChatGPTக்கு போட்டியாக கூகுள் Bard! தெரிந்து கொள்ள வேண்டியவை

Feb 07, 2023, 11:47 AM IST

LaMDAவில் இயங்கும் Bard என்ற சாட்பாட் வரும் வாரங்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இது AI சாட்பாட்டான ChatGPTக்கு போட்டியாக களமிறக்கப்படுகிறது.
LaMDAவில் இயங்கும் Bard என்ற சாட்பாட் வரும் வாரங்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இது AI சாட்பாட்டான ChatGPTக்கு போட்டியாக களமிறக்கப்படுகிறது.

LaMDAவில் இயங்கும் Bard என்ற சாட்பாட் வரும் வாரங்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இது AI சாட்பாட்டான ChatGPTக்கு போட்டியாக களமிறக்கப்படுகிறது.

கூகுள் நிறுவனம் Bard என்ற பெயரில் உரையாரடல் நிகழ்த்தும் AI சாட்பாட்டை அறிமுகப்படுத்துகிறது. இதுதொடர்பாக டுவிட்டர் மற்றும் கூகுள் பிளாக்கில், கூகுள் நிறுவன தலைமை செயல் அலுவலர் சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளார். இந்த Bard சாட்பாட், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகி மக்கள் மத்திய மிகவும் பிரபலமாகியுள்ள ChatGPT என்கிற OpenAIக்கு நேரடி போட்டியாக வருகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Modi vs Rahul Gandhi: ‘நான் எழுதி தர்றேன்! மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார்!’ ரேபரேலியில் ராகுல் காந்தி பேச்சு!

Prashant Kishore: ’பாஜகதான் ஆட்சி அமைக்கும்! மோடியை வீழ்த்தனும்னா இதை பண்ணுங்க!’ பிரசாந்த் கிஷோர் பேட்டி

Election 2024: ’இத்தாலி நாட்டின் சோனியா காந்தியை போல் மோடி இந்தி தெரியாதவர் அல்ல!’ பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கிண்டல்!

Fact Check : YSRCP வாக்கெடுப்பில் 100% வெற்றி பெறும்’ என சந்திரபாபு நாயுடு கூறினாரா? வைரலாகும் வீடியோ.. நடந்தது என்ன?

Bard, சோதனை முயற்சியாக உரையாடல் #GoogleAI சேவை விரைவில் வெளியாக உள்ளது என்று சுந்தர் பிச்சை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கூகுளால் உருவாக்கப்பட்டு வரும் சாட்பாட் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்:

  • AI பயணத்தில் அடுத்தகட்ட நகர்வாக Bard இருக்கும் என தெரிவித்துள்ள சுந்தர் பிச்சை, "நம்மிடம் உள்ள பலதரப்பட் மொழி மாதிரிகளின் சக்தி, புத்திசாலித்தனம் மற்றும் படைப்பாற்றலுடன் உலக அறிவின் அகலத்தை இணைக்க முயல்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
  • LaMDA எனப்படும் உரையாடல் பயன்பாடுகளுக்கான மொழி மாதிரி (Language Model for Dialogue Applications) என்பவற்றின் மூலம்
  • Bard இயங்கவுள்ளது. மிகவும் லைட்வெயிட் மாடலான இந்த LaMDA சாட்பாட் இருக்கவுள்ளது.
  • இணையத்திலிருந்து உயர் தர, புதுமையான பதில்கள், தகவல்களை உடனடியாக பதில் அளிக்கும் இந்த Bard அமையும் என சொல்லப்படுகிறது. அதேபோல் சிக்கல் நிறைந்த தலைப்புகளை எளிமைப்படுத்தியும் தரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதில் வரும் தகவல்களின் தரம், பாதுகாப்பு போன்ற அம்சங்களை உறுதிபடுத்துவதற்கு பின்னூட்டம் செய்யும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் உட்புற சோதனை மேற்கொள்ளபட்டு உடனடி நிவர்த்திகள் மேற்கொள்ளப்படும்
  • தற்போது இது நம்பகத்தகுந்த மிக்க சோதனையாளர்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது. வரும் வாரங்களில் இந்த Bard பொதுமக்கள் முழுமையான பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி