தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Viral : ரீல்ஸ் மோகம்.. அருவிக்கு சென்ற இளைஞர் கால் தடுமாறி விழும் திக் திக் காட்சி.. உடலை தேடும் பணி தீவிரம்!

Viral : ரீல்ஸ் மோகம்.. அருவிக்கு சென்ற இளைஞர் கால் தடுமாறி விழும் திக் திக் காட்சி.. உடலை தேடும் பணி தீவிரம்!

Divya Sekar HT Tamil

Jul 25, 2023, 11:00 AM IST

கர்நாடக உடுப்பியில் ரீல்ஸ் எடுக்க அருவிக்கு சென்ற இளைஞர் நிலை தடுமாறி அருவியில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக உடுப்பியில் ரீல்ஸ் எடுக்க அருவிக்கு சென்ற இளைஞர் நிலை தடுமாறி அருவியில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக உடுப்பியில் ரீல்ஸ் எடுக்க அருவிக்கு சென்ற இளைஞர் நிலை தடுமாறி அருவியில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால் மாநிலத்தில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. கடலோர மாவட்டங்கள் மற்றும் மலைநாடு மாவட்டங்களில் மட்டும் இந்த மாத தொடக்கத்தில் பரவலாக மழை பெய்தது.

ட்ரெண்டிங் செய்திகள்

Taapsee Pannu: ‘கடமையே முக்கியம்’-நடிகை டாப்ஸியை பொருட்படுத்தாமல் பணிக்கு முக்கியத்துவம் தந்த ஸ்விக்கி ஊழியர்!

Iranian President killed in chopper crash: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

Fact Check: 'ஆந்திராவில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்'.. போலி கருத்து கணிப்பு பரப்பப்பட்டது அம்பலம் - உண்மை என்ன?

World Bee Day 2024: உலக தேனீக்கள் தினத்தின் முக்கியத்துவம், வரலாறு பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்..!

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்கி உள்ளது. குறிப்பாக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா மற்றும் மலைநாடு மாவட்டங்களான சிக்கமகளூரு, சிவமொக்கா ஆகிய பகுதிகளில் கடந்த 2 தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் வடகர்நாக மாவட்டமான தார்வாரில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

இதனால் பல்வேறு ஏரிகள், அணைகள் நிரம்பி வழிவதுடன் அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டி வருகின்றது. இந்த நிலையில் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி பகுதியை சேர்ந்த சரத்குமார் என்ற இளைஞர் உடுப்பி மாவட்டம் குந்தாபூர் அருகே உள்ள அரசினகுடி அருவிக்கு சென்றுள்ளார்.

அரசினகுடி மலைப்பகுதி மற்றும் அருவிக்கு சரத்குமார் தனது நண்பர் பரத்வாஜோடு வந்துள்ளார். கடுமையான மழை மற்றும் தண்ணீரின் அளவு ஏரிகளில் நிரம்பி வழிவதால் அப்பகுதியில் மலையேற்றத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. வனத்துறையினரின் கட்டுப்பாடுகள் விதித்தபோதும் தடையை மீறி 6கிமீ தூரம் இளைஞர்கள் மலையேற்றம் செய்ததாக கூறப்படுகிறது.

அங்கு அருவியில் ஆர்பரித்து கொட்டும் நீரின் முன் பாறையின் ஓரத்தில் நின்று ரீல்ஸ் எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது சரத்குமார் கால் வழுக்கியதால் நிலைதடுமாறி பாறை விழுந்து ஆர்பரித்து ஓடும் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சரத்குமாரின் நண்பர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இந்த தகவலின் அடிப்படையில் கொல்லூர் வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட இளைஞரை தேடி வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி