தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Covid-19: கொரோனா இன்னும் முடிவுக்கு வரலை.. புதிதாக பாதித்தோர் எண்ணிக்கை இதோ

Covid-19: கொரோனா இன்னும் முடிவுக்கு வரலை.. புதிதாக பாதித்தோர் எண்ணிக்கை இதோ

Manigandan K T HT Tamil

Jan 24, 2023, 11:31 AM IST

Corona: 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் இருந்து முதல் முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் எங்கும் சிறு கிராமங்களைக் கூட விட்டு வைக்காமல் பரவி வருகிறது. (AFP)
Corona: 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் இருந்து முதல் முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் எங்கும் சிறு கிராமங்களைக் கூட விட்டு வைக்காமல் பரவி வருகிறது.

Corona: 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் இருந்து முதல் முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் எங்கும் சிறு கிராமங்களைக் கூட விட்டு வைக்காமல் பரவி வருகிறது.

கொரோனா தடுப்பூசி கண்டறியப்பட்டு 200 கோடிக்கும் அதிகமான டோஸ் போடப்பட்ட பிறகும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த பிறகும் கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

PM Modi Exclusive Interview: இடைக்கால பட்ஜெட்டில் கவர்ச்சி திட்டங்களை அறிவிக்காதது ஏன்? - பிரதமர் மோடி பரபரப்பு விளக்கம்

Mother's Day: அன்னையின் பாதத்தில் சொர்க்கம்.. இறை நூல்கள் கூறும் தத்துவம்.. அன்னையர் தின வாழ்த்துகள்

Vladimir Putin: ரஷ்யாவின் பிரதமராக மைக்கேல் மிஷுஸ்டினை மீண்டும் விளாடிமிர் புதின் நியமித்தார்

Swift 2024: மாருதி சுசுகி ஸ்விஃப்ட் 2024 மாடல் இந்தியாவில்அறிமுகம்: விலை எவ்வளவு, பிற அம்சங்களை அறிவோம் வாங்க

எனினும், "இன்னும் நான் எங்கும் போகவில்லை" என்பது போன்ற கொரோனா பரவல் முழுமையாக முடிவுக்கு வரவில்லை.

அதேநேரம், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் பெருமளவு குறைந்திருப்பது மறுக்க முடியாத உண்மை. மக்கள் மத்தியிலும் அச்சம் இல்லாமல் இருக்கிறது.

இந்நிலையில், இந்தியாவில் புதிதாக 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதே நேரம், தற்போது இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,000-க்கும் கீழே வந்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில் ஒரே நாளில் 89 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று குறைந்து 1,931 ஆக உள்ளது.

கொரோனா தொற்று மொத்த எண்ணிக்கை இதுவரை 4.46 கோடியாக (4,46,82,104) பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு இறப்புகளுடன் சேர்த்து இறப்பு எண்ணிக்கை 5,30,737 ஆக உள்ளது. கேரளா மற்றும் ராஜஸ்தானில் ஒருவர் உயிரிழந்தனர்.

ஆக்டிவாக உள்ள பாதிப்புகள் இப்போது மொத்த நோய்த்தொற்றுகளில் 0.01 சதவீதமாக உள்ளன. அதே நேரத்தில் நாட்டின் COVID-19 மீட்பு விகிதம் 98.81 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,41,49,436 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் கொரோனா இறப்பு விகிதம் 1.19 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220.30 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசிகள் நாட்டில் வழங்கப்பட்டுள்ளன.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி