தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Female Police Suicide: பெண் உதவி காவல் ஆய்வாளர் தற்கொலை- போலீசார் தீவிர விசாரணை!

Female Police Suicide: பெண் உதவி காவல் ஆய்வாளர் தற்கொலை- போலீசார் தீவிர விசாரணை!

Divya Sekar HT Tamil

Jan 24, 2023, 11:43 AM IST

கோழிக்கோடு அருகே பெண் உதவி காவல் ஆய்வாளர் திடீர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோழிக்கோடு அருகே பெண் உதவி காவல் ஆய்வாளர் திடீர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோழிக்கோடு அருகே பெண் உதவி காவல் ஆய்வாளர் திடீர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோழிக்கோடு : கல்லேடு குன்னுமங்கலம் பகுதியில் வசிப்பவர் அரவிந்தன். இவரது மனைவி பீனா (46). இவர் கோழிக்கோடு பேராம்பரா காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் அரவிந்தன் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Kurkure craving sparks divorce:‘குர்குரே வாங்கித் தரல’-கணவரிடம் விவாகரத்து கோரிய பெண்

HBD Mark Zuckerberg: ‘ரிஸ்க் எடுக்காமல் இருப்பதுதான் மிகப்பெரிய ரிஸ்க்’- மார்க் ஜுக்கர்பெர்க் பிறந்த நாள் இன்று

Arvind Kejriwal: அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லி முதல்வர் பதவியில் இருந்து நீக்கக் கோரிய மனு: உச்ச நீதிமன்றத்தின் முடிவு என்ன

Bomb threat for Bengaluru hospital: பெங்களூரு மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு

இந்நிலையில், பீனா நேற்று (ஜன.23) வழக்கம் போல் காவல் நிலையத்துக்கு வேலைக்கு சென்றார். பின்னர் மாலை மகனை பள்ளிக்கூடத்தில் இருந்து அழைத்து வருவதாக கூறி விட்டு பீனா வெளியே சென்றார். 

ஆனால் அதன் பிறகு அவர் பணிக்கு திரும்பி வரவில்லை. வெகு நேரமாகியும் பீனா பணிக்கு வரவில்லை. இதனால் அதிகாரிகள் பீனாவை தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் போன் எடுக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரின் வீட்டுக்கு செல்ல முடிவெடுத்தனர். பின்னர் போலீசார் பீனாவின் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள ஒரு கட்டிடத்தில் பீனா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர், பீனாவின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் பீனா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. அவர் எதனால் தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றி தெரியவில்லை. இதுபற்றி அவரது கணவர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி