தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Elon Musk: டுவிட்டருக்கு புதிய சிஇஓ எப்போது?-எலான் மஸ்க் பதில்

Elon Musk: டுவிட்டருக்கு புதிய சிஇஓ எப்போது?-எலான் மஸ்க் பதில்

Manigandan K T HT Tamil

Feb 15, 2023, 11:55 AM IST

Twitter: அநேகமாக இந்த வருட இறுதிக்குள் டுவிட்டர் சிஇஓவை அறிவிப்பேன் என்று குறிப்பிட்டார். (AP)
Twitter: அநேகமாக இந்த வருட இறுதிக்குள் டுவிட்டர் சிஇஓவை அறிவிப்பேன் என்று குறிப்பிட்டார்.

Twitter: அநேகமாக இந்த வருட இறுதிக்குள் டுவிட்டர் சிஇஓவை அறிவிப்பேன் என்று குறிப்பிட்டார்.

தொழிலதிபர் எலான் மஸ்க் இந்த ஆண்டின் இறுதியில் ட்விட்டர் நிறுவனத்திற்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரியை அறிவிப்பார் என தெரிவித்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Modi vs Rahul Gandhi: ‘நான் எழுதி தர்றேன்! மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார்!’ ரேபரேலியில் ராகுல் காந்தி பேச்சு!

Prashant Kishore: ’பாஜகதான் ஆட்சி அமைக்கும்! மோடியை வீழ்த்தனும்னா இதை பண்ணுங்க!’ பிரசாந்த் கிஷோர் பேட்டி

Election 2024: ’இத்தாலி நாட்டின் சோனியா காந்தியை போல் மோடி இந்தி தெரியாதவர் அல்ல!’ பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கிண்டல்!

Fact Check : YSRCP வாக்கெடுப்பில் 100% வெற்றி பெறும்’ என சந்திரபாபு நாயுடு கூறினாரா? வைரலாகும் வீடியோ.. நடந்தது என்ன?

துபாயில் நடைபெற்ற உலக அரசு உச்சி மாநாட்டில் வீடியோ மூலம் பேசிய எலான் மஸ்க் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

நான் டுவிட்டர் நிறுவனத்தை நிலைப்படுத்த வேண்டும். அது நிதி ஆரோக்கியமான இடத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.

அநேகமாக இந்த வருட இறுதிக்குள் டுவிட்டர் சிஇஓவை அறிவிப்பேன் என்று குறிப்பிட்டார்.

51 வயதான மஸ்க், நிதி இணையதளமான PayPal இல் ஆரம்பத்தில் தனது பெரும் அளவிலான வருவாயை ஈட்டினார். பின்னர் விண்கல நிறுவனமான SpaceX மற்றும் மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவை உருவாக்கினார். இருப்பினும், சமீபத்திய மாதங்களில், சமூக வலைத்தளமான Twitter ஐ அவர் $44 பில்லியனுக்கு வாங்கினார்.

அதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வருகிறார் மஸ்க். மேலும் பணியாளர் குறைப்பையும் செய்தார்.

ஃபோர்ப்ஸ் பத்திரிகை மஸ்க்கின் சொத்து மதிப்பு $200 பில்லியனுக்கும் குறைவாக உள்ளது. ஃபோர்ப்ஸ் ஆய்வின்படி, French luxury brand அதிபரான பெர்னார்ட் அர்னால்ட்க்கு அடுத்தபடியாக, உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் மஸ்க்.

முன்னதாக, கடந்த ஆண்டு இறுதியில் புதிய சிஇஓ நியமிக்கப்பட்டதற்கு பிறகு டுவிட்டர் சிஇஓ பொறுப்பிலிருந்து விலகுவேன் என எலான் மஸ்க் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி