தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Bbc India: பிபிசி தொலைக்காட்சிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!

BBC India: பிபிசி தொலைக்காட்சிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!

Apr 13, 2023, 12:07 PM IST

பிபிசி நிறுவனத்தில் வெளிநாட்டு நிதி பெற்றதில் முறைகேடு நடந்தது என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் பிபிஐ செய்தி நிறுவனம் மீது தற்போது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. (REUTERS)
பிபிசி நிறுவனத்தில் வெளிநாட்டு நிதி பெற்றதில் முறைகேடு நடந்தது என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் பிபிஐ செய்தி நிறுவனம் மீது தற்போது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

பிபிசி நிறுவனத்தில் வெளிநாட்டு நிதி பெற்றதில் முறைகேடு நடந்தது என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் பிபிஐ செய்தி நிறுவனம் மீது தற்போது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

பிபிசி செய்தி நிறுவனம் மீது அமலாக்கத்தை துறை வழக்கு பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Taapsee Pannu: ‘கடமையே முக்கியம்’-நடிகை டாப்ஸியை பொருட்படுத்தாமல் பணிக்கு முக்கியத்துவம் தந்த ஸ்விக்கி ஊழியர்!

Iranian President killed in chopper crash: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

Fact Check: 'ஆந்திராவில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்'.. போலி கருத்து கணிப்பு பரப்பப்பட்டது அம்பலம் - உண்மை என்ன?

World Bee Day 2024: உலக தேனீக்கள் தினத்தின் முக்கியத்துவம், வரலாறு பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்..!

குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி நிறுவனம் இந்தியா மோடிக்கான கேள்விகள் என்ற ஆவணப்படத்தை வெளியிட்டது. இந்த ஆவணப்படும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து பிபிசி நிறுவனத்தில் வருமான வரித்துறை கடந்த பிப்ரவரி 14ம் தேதி அதிரடியாக நுழைந்து ஆய்வு நடத்தியிருந்தது.பிப்ரவரி 16 வரை நடந்த இந்த ஆய்வில் பிபிசி நிறுவனத்தில் வெளிநாட்டு நிதி பெற்றதில் முறைகேடு நடந்தது என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் பிபிஐ செய்தி நிறுவனம் மீது தற்போது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

முன்னதாக "வருமான வரி சட்டம் 1961 பிரிவு 133ஏ விதிகளை மீறியிருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து, டெல்லி, மும்பையில் உள்ள சர்வதேச செய்தி நிறுவன (பிபிசி) அலுவலகங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த நிறுவனம் ஆங்கிலம், இந்தி மற்றும் பல்வேறு இந்திய பிராந்திய மொழிகளில் செய்திகளை வெளியிட்டு வருகிறது. விளம்பரங்கள் மூலம் வருவாய் ஈட்டி வருகிறது. ஆங்கிலம் தவிர்த்து இந்திய பிராந்திய மொழிகளின் செய்தி சேவையில் பிபிசி ஈட்டிய விளம்பர வருவாயில் முரண்பாடுகள் உள்ளன. உண்மையான வருவாய்க்கு ஏற்ப அந்த நிறுவனம் வரி செலுத்தவில்லை. பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

வெளிநாடுகளை சேர்ந்த தற்காலிக ஊழியர்களுக்கு பிபிசி நிறுவனம் ஊதியம் வழங்கியிருக்கிறது. சட்டவிதிகளின்படி இந்த ஊதியத்துக்கு வரி செலுத்த வேண்டும். ஆனால்,பிபிசி முறையாக வரி செலுத்தவில்லை. வரிஏய்ப்பு தொடர்பான ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பிபிசி ஊழியர்கள் அளித்த வாக்குமூலம் முக்கிய ஆதாரங்களாக சேர்க்கப்பட உள்ளன.

வருமான வரித் துறை ஆய்வின்போது பிபிசி நிறுவனம் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை. எனினும், அதன் செய்தி சேவையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஆய்வு நடத்தப்பட்டது". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி