தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Corona Update: நாட்டில் புதிதாக 6,155 பேருக்கு கொரோனா தொற்று–11 பேர் உயிரிழப்பு

Corona Update: நாட்டில் புதிதாக 6,155 பேருக்கு கொரோனா தொற்று–11 பேர் உயிரிழப்பு

Priyadarshini R HT Tamil

Apr 08, 2023, 11:28 AM IST

இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 6,155 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 31,194 ஆக உள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 6,155 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 31,194 ஆக உள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 6,155 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 31,194 ஆக உள்ளது.

கோவிட் – 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஆனால், பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால், தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். எனவே பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்கும் வரை கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையை சரியாக கூறமுடியாது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

ட்ரெண்டிங் செய்திகள்

Taapsee Pannu: ‘கடமையே முக்கியம்’-நடிகை டாப்ஸியை பொருட்படுத்தாமல் பணிக்கு முக்கியத்துவம் தந்த ஸ்விக்கி ஊழியர்!

Iranian President killed in chopper crash: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

Fact Check: 'ஆந்திராவில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்'.. போலி கருத்து கணிப்பு பரப்பப்பட்டது அம்பலம் - உண்மை என்ன?

World Bee Day 2024: உலக தேனீக்கள் தினத்தின் முக்கியத்துவம், வரலாறு பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,155 பேருக்கு புதிதாக கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் இந்த எண்ணிக்கை 6,050 ஆக இருந்தது. இதனுடன் நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 4,47,51,259 ஆக இருந்தது. சுகாதார அமைச்சம் வெளியிட்ட தகவலின் படி நாட்டில் தற்போது தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 31,194 ஆக உள்ளது. அமைச்சகத்தின் தகவல்படி 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கோவிட் – 19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,30,954ஆக உள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்களிடம், தொற்று அதிகம் பரவும் இடங்களை கண்டுபிடித்து, பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா, மரபணு பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். மருத்துவமனைகளில் சோதனை பயிற்சிகளும் மேற்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளார்.

இன்சாகாக்கின் அண்மை தகவல்படி நாட்டின் பல இடங்களிலும், கோவிட் – 19, XBB.1.16 உருமாற்றம் பெற்ற வகை வைரஸ் அதிகம் உள்ளது. இதனால் 38.2 சதவீத தொற்றுகள் ஏற்படுகிறது. 

ஒமிக்ரானும், அதன் உபவகைகளும்தான் இந்தியாவில் தற்போது அதிகம் உள்ளது. உயர்ந்துவரும் தொற்று விகிதம், இந்தியாவின் மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் கண்காணிக்கப்பட்டு வருகிறது அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. 

இதுவரை இந்தியாவில் 220.66 கோடி பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி