தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Corona Cases: வேகம் எடுக்கும் கொரோனா பரவல்.. 35 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு

Corona Cases: வேகம் எடுக்கும் கொரோனா பரவல்.. 35 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு

Aarthi V HT Tamil

Apr 10, 2023, 10:42 AM IST

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5, 880 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5, 880 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5, 880 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்த வந்த வண்ணம் உள்ளன.

ட்ரெண்டிங் செய்திகள்

Taapsee Pannu: ‘கடமையே முக்கியம்’-நடிகை டாப்ஸியை பொருட்படுத்தாமல் பணிக்கு முக்கியத்துவம் தந்த ஸ்விக்கி ஊழியர்!

Fact Check: 'ஆந்திராவில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்'.. போலி கருத்து கணிப்பு பரப்பப்பட்டது அம்பலம் - உண்மை என்ன?

World Bee Day 2024: உலக தேனீக்கள் தினத்தின் முக்கியத்துவம், வரலாறு பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்..!

Blue Origin Space Tourism: ப்ளூ ஆர்ஜின் விண்வெளி பயணத்தில் இடம்பிடித்த இந்திய வம்சாவளி பைலட்

அதன் படி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 85 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், 5, 880 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நேற்றைய தினம் 5,357 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், இன்று வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. ஒரேநாளில் நாட்டில் 5, 880 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் 35,199ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் நேற்று முன்தினம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32ஆயிரத்து 814 இருந்த நிலையில், இன்று காலை 35,199 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் அதிகபட்சமாக கேரளாவில் மட்டும் 12 ஆயிரத்து 433 பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்தாக மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், ஹரியானா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாகி உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 369 பேருக்கு பாதிப்பு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் 1900 ஆக உள்ளது. 172 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளில் இன்று மற்றும் நாளை கொரோனா சிறப்பு ஒத்திகையானது மேற்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி