தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Congress Manifesto: 'பஜ்ரங் தளம் அமைப்புக்கு தடை விதிப்பீர்களா?'-கொதித்தெழுந்த அஸ்ஸாம் முதல்வர்

Congress Manifesto: 'பஜ்ரங் தளம் அமைப்புக்கு தடை விதிப்பீர்களா?'-கொதித்தெழுந்த அஸ்ஸாம் முதல்வர்

Manigandan K T HT Tamil

May 02, 2023, 12:02 PM IST

Karnataka Polls: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மதச்சார்பற்ற கட்சியின் தேர்தல் அறிக்கை போல் இல்லை என அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த் விஸ்வ சர்மா கூறியுள்ளார். (PTI)
Karnataka Polls: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மதச்சார்பற்ற கட்சியின் தேர்தல் அறிக்கை போல் இல்லை என அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த் விஸ்வ சர்மா கூறியுள்ளார்.

Karnataka Polls: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மதச்சார்பற்ற கட்சியின் தேர்தல் அறிக்கை போல் இல்லை என அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த் விஸ்வ சர்மா கூறியுள்ளார்.

கர்நாடகத்தில் வரும் 10 ம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் பாஜக, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Amit Shah About Congress: ’தேர்தல் முடிந்தால் காங்கிரஸை பைனாகுலரில் கூட பார்க்க முடியாது!’ வியூகத்தை உடைத்த அமித்ஷா!

Iranian President killed in chopper crash: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

Fact Check: 'ஆந்திராவில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்'.. போலி கருத்து கணிப்பு பரப்பப்பட்டது அம்பலம் - உண்மை என்ன?

World Bee Day 2024: உலக தேனீக்கள் தினத்தின் முக்கியத்துவம், வரலாறு பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்..!

பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்டோர் கர்நாடகத்தில் சூறாவளி தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டனர்.

பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அரை லிட்டர் பால், வருடத்திற்கு 3 கியாஸ் சிலிண்டர் ஏழை குடும்பத்திற்கு இலவசமாக அளிக்கப்படும் என வாக்குறுதி கொடுத்திருக்கிறது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், "பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா எனப்படும் பிஎஃப்ஐ, பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகள் உள்பட சமூகத்தில் மதத்தை வைத்து வெறுப்பை பரப்பினால், எந்த ஒரு அமைப்போ, தனிநபரோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என அறிவித்துள்ளது.

பஜ்ரங் தளம், விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகள் மத, ஜாதி ரீதியிலான வெறுப்புணர்வை பரப்பினால் அத்தகைய அமைப்புகளுக்கு தடை விதிக்கப்படும் எனவும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்குறுதியை அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த விஸ்வ சர்மா கடுமையாக விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மதச்சார்பற்ற கட்சியின் தேர்தல் அறிக்கை போல் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சி மதச்சார்பற்ற கட்சி என கூறிக் கொள்கிறது. பஜ்ரங் தளம் அமைப்புக்கு தடை விதிக்கப்படும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

அவர்கள் (காங்கிரஸ்) ஏன் பிஎஃப்ஐ அமைப்பை தடை செய்யவில்லை? பிஎஃப்ஐ தலைவர்கள் மீதான வழக்குகளை சித்தராமையா ஏன் திரும்பப் பெற்றார்? கேரளாவில் முஸ்லீம் லீக்குடன் ஏன் இணைந்தீர்கள்? காங்கிரஸின் தேர்தல் அறிக்கை மதச்சார்பற்ற கட்சியின் தேர்தல் அறிக்கை போல் இல்லை" என்றார் ஹிமந்த் விஸ்வ சர்மா.

தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே (நடுவில்). உடன், முன்னாள் முதல்வர் சித்தராமைய்யா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முக்கிய வாக்குறுதிகள்

*இரவு நேரப் பணி புரியும் போலீஸாருக்கு சிறப்பு கொடுப்பனவு மாதம் ரூ.5ஆயிரம் அளிக்ப்படும்

* பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை

*வேலையில்லாத இளைஞர்களுக்கு நிதியுதவி, மகளிருக்கு இலவச பயணம், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினரின் வளர்ச்சிக்கு நடவடிக்கை.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி