தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Bihar Bjp Mla: பாஜக பெண் எம்எல்ஏ மீது திருட்டு வழக்குப் பதிவு..காரணம் என்ன?

Bihar BJP MLA: பாஜக பெண் எம்எல்ஏ மீது திருட்டு வழக்குப் பதிவு..காரணம் என்ன?

Manigandan K T HT Tamil

Jan 25, 2023, 12:30 PM IST

Bihar BJP MLA Rashmi Verma: பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான நிதீஷ் குமார் அரசு ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பாஜகவுடன் கூட்டணியில் இருந்து விலகிய நிதீஷ் குமார், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் கூட்டணி அமைத்து ஆட்சி புரிந்து வருகிறார்.
Bihar BJP MLA Rashmi Verma: பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான நிதீஷ் குமார் அரசு ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பாஜகவுடன் கூட்டணியில் இருந்து விலகிய நிதீஷ் குமார், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் கூட்டணி அமைத்து ஆட்சி புரிந்து வருகிறார்.

Bihar BJP MLA Rashmi Verma: பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான நிதீஷ் குமார் அரசு ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பாஜகவுடன் கூட்டணியில் இருந்து விலகிய நிதீஷ் குமார், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் கூட்டணி அமைத்து ஆட்சி புரிந்து வருகிறார்.

அந்த மாநிலத்தில் மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள நர்கடியாகஞ்ச் சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக உள்ள பாஜகவின் ராஷ்மி வர்மா.

ட்ரெண்டிங் செய்திகள்

Bibhav Kumar: ஆம் ஆத்மி எம்.பி.மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு: கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் கைதும் பின்னணியும்!

Heatwave Warning: வரும் மே 21ஆம் தேதி வரை புதிய வெப்ப அலைவீசும்: இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை

Modi vs Rahul Gandhi: ‘நான் எழுதி தர்றேன்! மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார்!’ ரேபரேலியில் ராகுல் காந்தி பேச்சு!

Prashant Kishore: ’பாஜகதான் ஆட்சி அமைக்கும்! மோடியை வீழ்த்தனும்னா இதை பண்ணுங்க!’ பிரசாந்த் கிஷோர் பேட்டி

அங்கு அமைந்துள்ள கல்லூரி ஒன்றில் அத்துமீறி நுழைந்து முக்கியமான ஆவணங்களை எடுத்துச் சென்றதாக சம்பந்தப்பட்ட கல்லூரியின் முதல்வர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், ராஷ்மி வர்மாவுக்கு எதிராக திருட்டு வழக்கை போலீஸார் பதிவு செய்தனர்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:

ராஷ்மி வர்மா உட்பட 25 பேர் மீது ஷிகர்பூர் காவல் நிலையத்தில் கல்லூரி முதல்வர் அபய் காந்த் திவாரி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

புகார்தாரர் திவாரி, ஜனவரி 17 அன்று ஒரு வழக்குக்காக ஒரு வழக்கறிஞரை சந்திக்க பாட்னா சென்றதாகவும், மற்றொரு ஆசிரியர் விவேக் பதக்கிடம் பொறுப்பு கொடுக்கப்பட்டதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் அந்த மனுவில், " நர்கதியாகஞ்ச் எம்எல்ஏ ரஷ்மி வர்மா தலைமையில் சிலர் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்ததாக எனக்குத் தகவல் கிடைத்தது. அவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்ததால், விவேக் பதக் உயிரைக் காப்பாற்ற கல்லூரியில் இருந்து தப்பினார். வர்மாவின் ஆதரவாளர்கள் ஒவ்வொரு அறையிலும் நுழைந்து, அலமாரிகளை உடைத்து, மதிப்புமிக்க ஆவணங்களை எடுத்துச் சென்றனர்" என்று குறிப்பிட்டிருந்தார்.

அவரது புகாரின் அடிப்படையில், எம்எல்ஏ மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. "நாங்கள் புகாரைப் பெற்றுள்ளோம், எம்எல்ஏ மற்றும் சம்பந்தப்பட்ட மற்றவர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர் எண் 53/27) பதிவு செய்துள்ளோம் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

புகாரை மறுத்த பாஜக எம்எல்ஏ

இதனிடையே, பாஜக எம்எல்ஏ ராஷ்மி வர்மா தனக்கு எதிரான புகாரை மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகயைில், "எனக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறித்து எதுவும் தெரியாது. எனக்கு முதல் தகவல் அறிக்கை நகலும் கிடைக்கவில்லை. வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தால் எனக்கு எதிராக ஏன் புகார் அளிக்கப்பட்டது என்றும் தெரியவில்லை. ஒருவேளை யாராவது எனக்கு எதிராக புகார் அளித்திருந்தால் அதுகுறித்து முதலில் காவல் துறை அதிகாரிகள் என்னிடம் கேட்டிருக்க வேண்டும். அதன் பிறகு தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்" என்றார் அவர்.

பாஜக எம்எல்ஏவுக்கு எதிராக திருட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த அந்த மாநில அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி