தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Bbc Punjabi News: பிபிசி பஞ்சாபி நியூஸ் டிவிட்டர் கணக்கு சேவை நிறுத்தம்

BBC Punjabi News: பிபிசி பஞ்சாபி நியூஸ் டிவிட்டர் கணக்கு சேவை நிறுத்தம்

Manigandan K T HT Tamil

Mar 28, 2023, 02:12 PM IST

Twitter Account: சீக்கியர்களுக்கு காலிஸ்தான் தனி நாடு கோரும் வாரிஸ் பஞ்சாப் தே என்ற பிரிவினைவாத அமைப்புக்கு எதிராக மத்திய அரசும் பஞ்சாப் அரசும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
Twitter Account: சீக்கியர்களுக்கு காலிஸ்தான் தனி நாடு கோரும் வாரிஸ் பஞ்சாப் தே என்ற பிரிவினைவாத அமைப்புக்கு எதிராக மத்திய அரசும் பஞ்சாப் அரசும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

Twitter Account: சீக்கியர்களுக்கு காலிஸ்தான் தனி நாடு கோரும் வாரிஸ் பஞ்சாப் தே என்ற பிரிவினைவாத அமைப்புக்கு எதிராக மத்திய அரசும் பஞ்சாப் அரசும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

பஞ்சாபி மொழியில் செய்தி வழங்கிவரும் முன்னணி செய்தி நிறுவனங்களில் ஒன்றான பிபிசி பஞ்சாபி செய்தியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவைச் சேர்ந்த பயனர்கள் அந்த டிவிட்டர் கணக்கை அணுக முடியாது.

ட்ரெண்டிங் செய்திகள்

Heatwave Warning: வரும் மே 21ஆம் தேதி வரை புதிய வெப்ப அலைவீசும்: இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை

Modi vs Rahul Gandhi: ‘நான் எழுதி தர்றேன்! மோடி மீண்டும் பிரதமர் ஆக மாட்டார்!’ ரேபரேலியில் ராகுல் காந்தி பேச்சு!

Prashant Kishore: ’பாஜகதான் ஆட்சி அமைக்கும்! மோடியை வீழ்த்தனும்னா இதை பண்ணுங்க!’ பிரசாந்த் கிஷோர் பேட்டி

Election 2024: ’இத்தாலி நாட்டின் சோனியா காந்தியை போல் மோடி இந்தி தெரியாதவர் அல்ல!’ பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கிண்டல்!

டிவிட்டர் பக்கத்தில், "சட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில்" கணக்கு நிறுத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிவிட்டர் மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங்கை தேடும் நடவடிக்கையில் போலீஸார் இறங்கியுள்ள நிலையில் இந்த நடவடிக்கையை டிவிட்டர் எடுத்துள்ளது.

சீக்கியர்களுக்கு காலிஸ்தான் தனி நாடு கோரும் வாரிஸ் பஞ்சாப் தே என்ற பிரிவினைவாத அமைப்புக்கு எதிராக மத்திய அரசும் பஞ்சாப் அரசும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் பலரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைவராக செயல்பட்டு வந்த அம்ரித்பால் சிங்கை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அம்ரித்பால் சிங்கைத் தேடும் பணியில் பஞ்சாப் மற்றும் அதனை சுற்றியுள்ள மாநிலங்களின் போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

முன்னதாக, போலீஸுக்கு கண்ணாமூச்சி காட்டி தப்பி வரும் அவர் தற்போது ஹரியாணாவில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. போலீசாரிடம் சிக்க கொள்ளாமல் இருக்க அம்ரித்பால் சிங் பென்ஸ் கார், மாருதி கார், பைக் என மாறி மாறி தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

 அவரது ஆதரவாளராகவும், அம்ரித்பால் சிங் அமைப்பின் கூட்டாளியாகவும் இருந்து வரும் கூர்க்கா பாபா என்று அழைக்கப்படும் தேஜிந்தர் சிங் கில் என்பவரை கன்னா பகுதியை சேர்ந்த போலீசார் கைது செய்துள்ளனர். 

தேஜிந்தர் சிங்கிடமிருந்து அம்ரிஸ்டர் பகுதி அருகே காலிஸ்தான் ஆதரவாளர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ளும் விடியோவையும் கைப்பற்றியுள்ளனர். AKF எனப்படும் துப்பாக்கி சுடும் தளத்தை அம்ரித்பால் சிங் தான் நிறுவியுள்ளார். அதன் அதிகாரப்பூர்வ பக்கத்தில் காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் கையில் துப்பாக்கி ஏந்தியவாறு இருக்கும் புகைப்படமும் இடம்பிடித்துள்ளது. 

அம்ரித்பால் சிங்கின் இந்த எழுச்சிக்கு பாகிஸ்தானை சேர்ந்த உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பங்கு இருக்ககூடும் என போலீசார் சந்தேக்கின்றன.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி