தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Chhattisgarh : பகீர் சம்பவம்.. திடீரென மின்தடை.. திருமண விழாவில் வீசப்பட்ட திராவகம்.. 12 பேர் உடல் கருகிய சோகம்!

Chhattisgarh : பகீர் சம்பவம்.. திடீரென மின்தடை.. திருமண விழாவில் வீசப்பட்ட திராவகம்.. 12 பேர் உடல் கருகிய சோகம்!

Divya Sekar HT Tamil

Apr 21, 2023, 10:07 AM IST

Chhattisgarh Acid Attack : சத்தீஸ்கர் மாநிலத்தில் திருமண விழாவின்போது திராவகம் போன்ற பொருளை வீசியதில் மணமக்கள் மற்றும் உறவினர்கள் 12 பேர் உடல் கருகி காயமடைந்தனர்.
Chhattisgarh Acid Attack : சத்தீஸ்கர் மாநிலத்தில் திருமண விழாவின்போது திராவகம் போன்ற பொருளை வீசியதில் மணமக்கள் மற்றும் உறவினர்கள் 12 பேர் உடல் கருகி காயமடைந்தனர்.

Chhattisgarh Acid Attack : சத்தீஸ்கர் மாநிலத்தில் திருமண விழாவின்போது திராவகம் போன்ற பொருளை வீசியதில் மணமக்கள் மற்றும் உறவினர்கள் 12 பேர் உடல் கருகி காயமடைந்தனர்.

ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் புதன்கிழமை நடந்த திருமண கொண்டாட்டத்தின் போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அமிலம் போன்ற பொருளை வீசியதில் மணமகள் மற்றும் மணமகன் உட்பட 12 பேர் தீக்காயமடைந்தனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Taapsee Pannu: ‘கடமையே முக்கியம்’-நடிகை டாப்ஸியை பொருட்படுத்தாமல் பணிக்கு முக்கியத்துவம் தந்த ஸ்விக்கி ஊழியர்!

Iranian President killed in chopper crash: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

Fact Check: 'ஆந்திராவில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்'.. போலி கருத்து கணிப்பு பரப்பப்பட்டது அம்பலம் - உண்மை என்ன?

World Bee Day 2024: உலக தேனீக்கள் தினத்தின் முக்கியத்துவம், வரலாறு பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்..!

மின்வெட்டைப் பயன்படுத்தி, மணமகள்,மணமகன் மண்டபத்தில் அமர்ந்திருந்தபோது, யாரோ ஒருவர் திரவப் பொருளை வீசியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

பன்பூர் பகுதியில் உள்ள சோட் அமாபால் கிராமத்தில் மணமகன் டாம்ருதர் பாகெல் (25) மணமகள் சுனிதா காஸ்யப் (19) ஆகியோரின் திருமணம் நேற்று முன்தினம் மணமகள் வீட்டில் நடந்தது. திருமண சம்பிரதாயத்திற்காக அமர்ந்திருந்த மணமக்கள் மீது திருமணத்தில் விருப்பமில்லாத யாரோ மர்ம நபர், மின்சாரம் துண்டிக்கப்பட்ட வேளையில் மணமக்களை நோக்கி மீது திராவகம் போன்ற பொருளை வீசிவிட்டு தப்பிவிட்டார்.

இதில் மணமக்கள் மற்றும் அவர்களை சுற்றி நின்ற உறவினர்கள் 12 பேர் பாதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் நான்கு வயது சிறுமியும் அடங்குவர். இந்த திருமண விழாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ சந்தன் காஷ்யப் கலந்து கொண்டிருந்தார். அவர் உடனடியாக அவரது கான்வாய் வாகனங்களில் பன்புரி மருத்துவமனைக்கு காயமடைந்தவர்கள் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் சிலர் ஜக்தல்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

அதே நேரத்தில் மணமகன் மறுநாள் காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அடையாளம் தெரியாத நபர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

டாபிக்ஸ்

அடுத்த செய்தி