தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  கோவா நெடுஞ்சாலையில் லாரியுடன் கார் மோதி விபத்து-குழந்தை உள்பட 9 பேர் பலி

கோவா நெடுஞ்சாலையில் லாரியுடன் கார் மோதி விபத்து-குழந்தை உள்பட 9 பேர் பலி

Manigandan K T HT Tamil

Jan 19, 2023, 12:44 PM IST

மும்பை-கோவா நெடுஞ்சாலையில் கார் ஒன்று டிரக் மீது இன்று காலை நேருக்கு நேர் மோதியதில் ஒரு குழந்தை, 3 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
மும்பை-கோவா நெடுஞ்சாலையில் கார் ஒன்று டிரக் மீது இன்று காலை நேருக்கு நேர் மோதியதில் ஒரு குழந்தை, 3 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.

மும்பை-கோவா நெடுஞ்சாலையில் கார் ஒன்று டிரக் மீது இன்று காலை நேருக்கு நேர் மோதியதில் ஒரு குழந்தை, 3 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது;

ட்ரெண்டிங் செய்திகள்

Fact Check : YSRCP வாக்கெடுப்பில் 100% வெற்றி பெறும்’ என சந்திரபாபு நாயுடு கூறினாரா? வைரலாகும் வீடியோ.. நடந்தது என்ன?

Mamata Banerjee: ’மம்தா பானர்ஜி ஜெயித்தால் பாஜகவை ஆதரிப்பார்!’ ஆதிர் ரஞ்சன் பேச்சால் இந்தியா கூட்டணியில் சர்ச்சை!

Fact Check: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் லாரியில் தூக்கிச் செல்லப்படுவதாக வைரலாகும் வீடியோ? – உண்மைத்தன்மை என்ன?

Fact Check: என்னது.. இதுதான் பிரதமர் மோடியின் திருமண போட்டோவா.. வைரலாகி வரும் செய்தியின் உண்மைத்தன்மை என்ன?

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் இருந்து 130 கி.மீ தொலைவில் உள்ள ராய்காட் மாவட்டத்தில் உள்ள மங்கான் அருகே இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

ஒரு குழந்தை, 5 ஆண்கள், 3 பெண்கள் என 9 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் உறவினர்கள். ரத்னகிரி மாவட்டம் குஹாகர் நகரில் உள்ள ஹெட்வி கிராமத்தில் வசிப்பவர்கள். கார் குஹாகர் நோக்கியும், லாரி மும்பை நோக்கியும் சென்று கொண்டிருந்தது.

அப்போது, நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. லாரியிலும் சேதம் ஏற்பட்டது அங்கிருந்து வீடியோவில் தெரியவந்துள்ளது.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் ஒரு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது சீராகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

மேலும், உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி