தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Kerala Attapadi Madhu Case: மது கொலை வழக்கு-குற்றவாளிகளுக்கு 7 ஆண்டு சிறை

Kerala Attapadi Madhu Case: மது கொலை வழக்கு-குற்றவாளிகளுக்கு 7 ஆண்டு சிறை

Apr 05, 2023, 01:26 PM IST

மது கொலை வழக்கில் தொடர்புடைய 13 பேருக்கு 7 ஆண்டுகள் தண்டனை விதித்து என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மது கொலை வழக்கில் தொடர்புடைய 13 பேருக்கு 7 ஆண்டுகள் தண்டனை விதித்து என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மது கொலை வழக்கில் தொடர்புடைய 13 பேருக்கு 7 ஆண்டுகள் தண்டனை விதித்து என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம், அட்டப்பாடியில் அரிசி திருடியதாக கும்பலால் அடித்து பழங்குடியின இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 13 பேருக்கு 7 ஆண்டுகள் தண்டனை விதித்து என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Taapsee Pannu: ‘கடமையே முக்கியம்’-நடிகை டாப்ஸியை பொருட்படுத்தாமல் பணிக்கு முக்கியத்துவம் தந்த ஸ்விக்கி ஊழியர்!

Iranian President killed in chopper crash: ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

Fact Check: 'ஆந்திராவில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்'.. போலி கருத்து கணிப்பு பரப்பப்பட்டது அம்பலம் - உண்மை என்ன?

World Bee Day 2024: உலக தேனீக்கள் தினத்தின் முக்கியத்துவம், வரலாறு பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்..!

கேரள மாநிலம், அட்டப்பாடியில் குகையில் வசித்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட மது என்ற பழங்குடியின இளைஞர், 2018-ம் ஆண்டு பலசரக்கு கடை ஒன்றில் அரிசி திருடியதாக கட்டிவைத்து தாக்கப்பட்டார். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மீட்ட போலீஸார் மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மதுவை அடித்துக் கொன்ற வழக்கில் 16 பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

பிரேத பரிசோதனையில் மது பட்டினியால் வாடியிருந்தது தெரியவந்தது. ஒட்டுமொத்த நாட்டையும் தலைகுனிய வைத்த இந்தச் சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவர் தாக்கப்பட்டது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி சோகத்தை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான வழக்கை எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இவ்வழக்கில் 3000 பக்க குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இறுதி வாதங்கள் நிறைவு பெற்ற நிலையில், மன்னார்காடு சிறப்பு நீதிமன்றம் 14 பேரை குற்றவாளிகள் என தீர்ப்பு அளித்தது. இந்திய தண்டனை சட்டம் 304 (2) பிரிவின் கீழ் குற்றவாளிகாக அவர்கள் அறிவிக்கப்பட்டனர்.

ஹுசைன், மரைக்காயர், ஷம்சுதீன், ராதாகிருஷ்ணன், அபுபக்கர், சித்திக், உபைத், நஜீப், ஜெய்ஜுமோன், முனீர் சஞ்சீவ், சதீஷ், ஹரீஷ் மற்றும் பிஜு உள்ளிட்டோரை குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில் இன்று தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டது. அதில்

குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் 13 பேருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து மன்னார்க்காடு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பதினாறாவது குற்றவாளியான முனீர் தவிர 13 பேருக்கு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையில் பாதியை மதுவின் தாயாருக்கு வழங்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது

டாபிக்ஸ்

அடுத்த செய்தி