தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Foot Fetishism: ‘அங்கதான் வாழணும்’ .. மரியாதையை அள்ளித்தரும் கால் செக்ஸ்; இவ்வளவு விஷயம் இருக்கா? - மருத்துவர் பேட்டி!

Foot Fetishism: ‘அங்கதான் வாழணும்’ .. மரியாதையை அள்ளித்தரும் கால் செக்ஸ்; இவ்வளவு விஷயம் இருக்கா? - மருத்துவர் பேட்டி!

Jul 26, 2023, 01:08 PM IST

‘வாரணம் ஆயிரம்.. ‘விடிவி’ உள்ளிட்ட திரைப்படங்களில் காண்பிப்பது போல பெண்களை பாதங்களை வருடி விடுதல், மசாஜ் செய்தல், அழுத்துதல் உள்ளிட்ட சின்ன சின்ன விஷயங்கள் அவர்களுக்கு என்ன மாதிரியான உணர்ச்சியை கொடுக்கும் என்பதை விளக்குகிறது இந்தக்கட்டுரைத் தொகுப்பு

இது குறித்து பாலியல் கல்வியாளர் ஜெயஸ்ரீ கூறும் போது, “உண்மையில் காலில் நாம் அதிகப்படியான காமத்தை தூண்ட முடியும். இதற்கு பெயர் Foot fetishism. ஒரு பெண்ணின் காலை மசாஜ் செய்தல், அதனை வருடி விடுதல், ரசித்தல், காலை தடவுதல், அதனை முத்தமிடுதல் உள்ளிட்டவை பெண்களுடைய காம உணர்வுகளை நன்றாகவே தூண்டும்.

ட்ரெண்டிங் செய்திகள்

Weight Loss Snacks: எடை குறைப்புக்கு வழிவகுக்கும் நார்சத்து மிக்க ஸ்நாக்ஸ் வகைகள்! வீட்டிலேயே தயார் செய்யலாம்

Avoid rapid weight loss: ‘விரைவான எடை இழப்பு வேண்டாம்.. வாரத்திற்கு எவ்வளவு எடை குறைந்தால் நல்லது?’-ICMR

Bottle gourd Pachadi : கோடையை குளுமையாக்கும் சுரைக்காய் தயிர் பச்சடி! கூட்டு, பொரியலுக்கு நல்ல மாற்று!

Menstruation Health : சிறுவயதிலே பூப்பெய்தும் பெண் குழந்தைகளை காக்கும் அருமருந்து! வெறும் கஞ்சி மட்டும் போதும்!

அப்படி செய்யும் போது, தம்பதிக்கு இடையே உள்ள அந்த தாம்பத்தியம் என்பது இன்னும் ஆழமாகச் செல்லும். பெண்களுக்கு இதுபோன்று மசாஜ் செய்யும் பொழுது, அது அவர்களை நல்ல தளர்வு நிலைக்கு கொண்டு செல்லும். நல்ல மசாஜ் இருக்கும் பொழுது, உடலில் லவ் ஹார்மோன்கள் நன்றாக வேலை செய்யும்.

இது பெண்களின் கால் பாதத்திலிருந்து ஆரம்பிக்கும். இது ஏதோ படத்தில் சும்மா காட்டுகிறார்கள் என்று நாம் எடுத்துக் கொள்ள முடியாது. ஒரு பெண்ணை ஆணனவன் எந்த அளவு மதிக்கிறான் என்பதை இந்த மாதிரியான சின்ன சின்ன வருடங்களில் அந்தப் பெண்ணுக்கு நன்றாகவே புரியும்.

எடுத்துக்காட்டாக நாம் மிகவும் சோர்வாக இருக்கிறோம் என்றால் நமது அம்மாவோ இல்லை வீட்டில் உள்ள யாரோ நமது தலையில் நன்றாக மசாஜ் செய்தாலே நாம் புத்துணர்ச்சி பெற்று விடுவோம். அப்படி இருக்கும் பொழுது ஒரு ஆணோ பெண்ணோ ஒருவருக்கொருவர் மசாஜ் செய்து கொள்ளும் பொழுது அவர்களுக்கு உடலில் லவ் ஹார்மோன்களும் என்டோர்ஃபின் ஹார்மோன்களும் இன்னும் நன்றாகச் சுரக்கும்.

இது அவர்களை ஒரு நல்ல நிலைக்கு எடுத்துச் செல்லும். இந்த மாதிரியான சின்ன சின்ன தொடுதல்களில் நமது காதலை வெளிப்படுத்தும் பொழுது தம்பதிகளுக்கு இடையேயான நெருக்கம் இன்னும் அதிகமாகும்.

இங்கு நெருக்கம் என்றாலே கட்டிப்பிடித்தல், முத்தம் கொடுத்தல் என்று அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் உண்மையில் நெருக்கம் என்பது கைகளை தொடுதல், வருடுதல் ஒன்றாக சேர்ந்து விளையாடுதல் உள்ளிட்டவற்றி இருந்தே ஆரம்பித்து விடுகிறது.

நன்றி: கலாட்டா யூடியூப் சேனல்!

டாபிக்ஸ்

அடுத்த செய்தி