தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Sexual Problems Common Among Obese People

Obesity problems: உடல் பருமனால் பாலுறவில் விரக்தி உண்டாகிறதா? இதோ தீர்வு!

I Jayachandran HT Tamil

Dec 01, 2022, 07:21 PM IST

உடல் பருமன் காரணமாக தம்பதியருக்குள் பாலுறவு வைத்துக் கொள்வதில் நாட்டம் குறைந்துவிடும். அதைத் தவிர்க்கதற்கான வழிகளை இந்தக் கட்டுரையில் காணலாம்.
உடல் பருமன் காரணமாக தம்பதியருக்குள் பாலுறவு வைத்துக் கொள்வதில் நாட்டம் குறைந்துவிடும். அதைத் தவிர்க்கதற்கான வழிகளை இந்தக் கட்டுரையில் காணலாம்.

உடல் பருமன் காரணமாக தம்பதியருக்குள் பாலுறவு வைத்துக் கொள்வதில் நாட்டம் குறைந்துவிடும். அதைத் தவிர்க்கதற்கான வழிகளை இந்தக் கட்டுரையில் காணலாம்.

இல்லற வாழ்க்கையை உடல் பருமன் பிரச்னையானது மிகவும் பாதிக்கிறது என்று பல்வேறு மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

ட்ரெண்டிங் செய்திகள்

Detox Symptoms : உங்கள் உடலுக்கு எப்போது கழிவு நீக்கம் தேவை? அதற்கான அறிகுறிகள் இவைதான்!

Tea : 'ஒரு டீ சாப்பிடலாமா சார்.. இந்த வார்த்தைக்கு பின்னாடி இத்தனை கதை இருக்கா' தேநீர் என்றும் நமக்கு சுவையான பானம்தான்!

Benefits of Bottle Guard : கோடையில் இந்த ஒரு காய் மட்டும் போதும்! உடலில் தண்ணீர் சத்து குறையாது!

Glowing Face : இரவில் இரண்டு சொட்டு மட்டும் இதை முகத்தில் தடவவேண்டும்! காலையில் முகம் ஜொலிக்கும்!

உடல் எடை அதிகரித்தால் தம்பதியருக்குள் பாலுறவு, பாலியல் இச்சை, தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ளும் எண்ணம் மிகவும் மோசமாகப் பாதிக்கின்றது.

உடல் பருமன் காரணமாக தம்பதியருக்குள் மற்றவர்களை விட 25 மடங்கு பிரச்னைகள் ஏற்படுவதாக பாலியல் சிகிச்சை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பாலுறவில் உடல் இயக்கம் மிக முக்கியம் என்பதால் உடல் பருமன் பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது. பிஎம்ஐ கால்குலேட்டரில் 40ஐ தாண்டினால் சிரமம்தான்.

உடல் பருமன் காரணமாக பாலுறவில் சிக்கல் உள்ளவர்கள் தகுந்த சிகிச்சையை மேற்கொண்டால் நல்லது. இப்படிப்பட்டவர்கள் இல்லற உறவில் நான்கு பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். அவை- பாலுறவில் இன்ப உணர்வு குறைதல், பாலியல் இச்சை குறைவு, பாலுறவில் ஈடுபடுவதில் சிரமங்கள், பாலுறவைத் தவிர்த்தல்.

இதுபோன்று பிரச்னை இருக்கும் தம்பதியர்கள் தங்களது பாலுறவு நிலைகளில் சில மாற்ரங்கள் செய்தால் போதும் பிரச்னை தீரந்துவிடும் என்ர யோசனையை பாலியல் சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் முன்வைக்கின்றனர்.

பெண்ணின் பின்புறமாக உறவுவைத்துக் கொள்ளுதல், ஆசனவாய் உறவு அல்ல, அதேபோல வாய்வழி உறவை முயற்சிக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றன்.

அத்துடன் படிப்படியாக உடற்பயிற்சிகளை செய்து உடல் எடையைக் குறைத்தல், உடலை வளைத்து இலகுவாக்குவதன் மூலம் இல்லறம் சிறக்கும் என்று வழிகாட்டுகின்றனர்.