தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ht Love Education: மூக்கை நுழைக்கும் மூன்றாம் நபர்; துண்டாக உடையும் காதல்; ரிலேஷன்ஷிப்பில் அந்த நபரின் எல்லை என்ன?

HT Love Education: மூக்கை நுழைக்கும் மூன்றாம் நபர்; துண்டாக உடையும் காதல்; ரிலேஷன்ஷிப்பில் அந்த நபரின் எல்லை என்ன?

May 07, 2024, 06:30 AM IST

HT Love Education: மூன்றாவது நபருக்கு உங்க இரண்டு பேர பத்தியும், உங்களுக்கு இடையே நடக்கக்கூடிய பிரச்சினைகள பத்தியும், நல்லா தெரிஞ்சிருக்கணும். உங்க ரிலேஷன்ஷிப்ல அவர் பயணிக்க, பிரச்சினைகள கேட்க, உங்க இரண்டு பேரோட சம்மதம் கண்டிப்பா இருக்கணும்.
HT Love Education: மூன்றாவது நபருக்கு உங்க இரண்டு பேர பத்தியும், உங்களுக்கு இடையே நடக்கக்கூடிய பிரச்சினைகள பத்தியும், நல்லா தெரிஞ்சிருக்கணும். உங்க ரிலேஷன்ஷிப்ல அவர் பயணிக்க, பிரச்சினைகள கேட்க, உங்க இரண்டு பேரோட சம்மதம் கண்டிப்பா இருக்கணும்.

HT Love Education: மூன்றாவது நபருக்கு உங்க இரண்டு பேர பத்தியும், உங்களுக்கு இடையே நடக்கக்கூடிய பிரச்சினைகள பத்தியும், நல்லா தெரிஞ்சிருக்கணும். உங்க ரிலேஷன்ஷிப்ல அவர் பயணிக்க, பிரச்சினைகள கேட்க, உங்க இரண்டு பேரோட சம்மதம் கண்டிப்பா இருக்கணும்.

ரிலேஷன்ஷிப் மிகவும் அழகானது என்றாலும், அதில் கிடைக்கும் பரஸ்பர அன்பை, நீண்ட காலம் கொண்டு செல்வது என்பது கடினமான ஒன்றே. 

ட்ரெண்டிங் செய்திகள்

Bottle gourd Pachadi : கோடையை குளுமையாக்கும் சுரைக்காய் தயிர் பச்சடி! கூட்டு, பொரியலுக்கு நல்ல மாற்று!

Menstruation Health : சிறுவயதிலே பூப்பெய்தும் பெண் குழந்தைகளை காக்கும் அருமருந்து! வெறும் கஞ்சி மட்டும் போதும்!

Live without Disease : நோயின்றி நூறாண்டு காலம் வாழ வேண்டுமா? அதற்கு என்ன தேவை – ஆய்வுகள் கூறுவது இதைத்தான்!

Kidney Cancer : உங்களுக்கு இந்த அறிகுறிகள் உள்ளதா? கவனம்! சிறுநீரக புற்றுநோயாக இருக்கலாம்!

தவறான புரிதல்கள், தேவையில்லாத வாக்கு வாதங்கள், சண்டைகள், முக்கியத்துவம் கொடுக்காமை, நேரம் ஒதுக்காமை உள்ளிட்ட பல பிரச்சினைகள், ஒரு ரிலேஷன்ஷிப் பாதியில் உடைவதற்கு காரணங்களாக அமைகின்றன. ரிலேஷன்ஷிப் பிரேக்- அப்பில் மிக முக்கியமான பிரச்சினையாக இருப்பது மூன்றாவது நபரின் தலையீடு. 

சில ரிலேஷன்ஷிப்பில் அந்த மூன்றாவது நபர், சரியான வழிகாட்டியாகவும், சில ரிலேஷன்ஷிப்பில் தேவையே இல்லாத ஆணியாகவும் இருப்பார். அப்படி, ரிலேஷன்ஷிப்பில் முக்கியப் பங்கு வகிக்கும், அந்த மூன்றாவது நபர் எப்படி இருக்க வேண்டும்? அவரை தேர்ந்தெடுக்கும் முன்னர், நாம் பார்க்க வேண்டியவை என்ன? ரிலேஷன்ஷிப்பில் அவரின் எல்லை என்ன? உள்ளிட்ட விஷயங்களை தெரிந்து கொள்ள, அப்பல்லோ மருத்துவமனையின் உளவியல் நிபுணர் டாக்டர் பார்கவ் ஸ்ரீ வேலுவை தொடர்பு கொண்டு பேசினேன்.

அவர் பேசும் போது, “ ரிலேஷன்ஷிப்ல மூன்றாவதா ஒரு நபர் நுழையுறாரு அப்படின்னா, அவர் யார் அப்படிங்கிற கேள்வி, இங்க ரொம்ப முக்கியம். அந்த மூன்றாவது நபர், யாரோ ஒரு ஃப்ரண்டாகவோ, வேறொரு உறவினராகவோ, உங்க ரிலேஷன்ஷிப்ல நடக்கக்கூடிய பிரச்சினைகள முழுமையா தெரியாதவராகவோ இருக்கக்கூடாது.

மூன்றாவது நபருக்கு உங்க இரண்டு பேர பத்தியும், உங்களுக்கு இடையே நடக்கக்கூடிய பிரச்சினைகள பத்தியும், நல்லா தெரிஞ்சிருக்கணும். உங்க ரிலேஷன்ஷிப்ல அவர் பயணிக்க, பிரச்சினைகள கேட்க, உங்க இரண்டு பேரோட சம்மதம் கண்டிப்பா இருக்கணும்.

உங்க ரிலேஷன்ஷிப்புக்குள்ள வரக்கூடிய அந்த மூன்றாவது நபர், யாரோ ஒரு தரப்புக்கு மட்டும், ஆதரவானவரா இருக்கக்கூடாது. அவர் நடுநிலையா இருந்து பிரச்சினைகள அணுகனும். அப்புறம், உங்க பிரச்சினைகள், குறித்த முழுமையான புரிதல் அவர்கிட்ட இருக்கணும்.

அந்த மூன்றாவது நபர் ஒரு மனநல மருத்துவராவோ அல்லது மேரேஜ் கவுன்சிலாராவோ என யாரா வேணாலும் இருக்கலாம். ஆனா ஒரே கண்டிஷன், அவர் நடுநிலையா பிரச்சினைய அணுகனும்.

ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம், அந்த மூன்றாவது நபர் உங்க ரிலேஷன்ஷிப்ல வரும் பிரச்சினைக்கு, முடிவு கொடுக்கக்கூடியவரா இருக்கவே கூடாது. அதில் அவர் தன்னுடைய கருத்தை முன்வைத்து விட்டு, நீங்கள் யோசித்து நல்ல முடிவுக்கு வாருங்கள் என்று சொல்லி செல்ல வேண்டும். 

இதுதான் ரிலேஷன்ஷிப்ல அந்த மூன்றாவது நபரோட ரோல்.. அந்த மூன்றாவது நபர் யாரா இருக்கலாம் அப்படிங்கிறத, நிச்சயமா இரண்டு பேரும் உட்கார்ந்து பேசிதான் முடிவெடுக்கணும். அது சொந்தக்காரராவோ அல்லது பொதுவான நண்பராவோ கூட இருக்கலாம். ரிலேஷன்ஷிப்ல இரண்டு பேரின் அனுமதி இருந்தா மட்டும்தான், அந்த மூன்றாவது நபர் லாஜிக் வொர்க் அவுட் ஆகும்.” என்று பேசினார். 

மருத்துவர் விபரம்: 

Dr.Bhargav Sirivelu

Consultant psychiatrist

Veeras hospital and Apollo hospital

bharghavsirivelu@gmail.com

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

அடுத்த செய்தி