தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  31 Years Ezhai Jaathi: தெறிக்கவிடும் வசனங்கள்..சூப்பர் ஹிட் பாடல்கள்.. விஜயகாந்த் அரசியலுக்கு தீனி போட்ட 'ஏழை ஜாதி'!

31 years Ezhai Jaathi: தெறிக்கவிடும் வசனங்கள்..சூப்பர் ஹிட் பாடல்கள்.. விஜயகாந்த் அரசியலுக்கு தீனி போட்ட 'ஏழை ஜாதி'!

Karthikeyan S HT Tamil

Feb 19, 2024, 08:54 AM IST

கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் உருவான ஏழை ஜாதி திரைப்படம் வெளியோகி இன்றோடு 31 ஆண்டுகளாகிறது.
கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் உருவான ஏழை ஜாதி திரைப்படம் வெளியோகி இன்றோடு 31 ஆண்டுகளாகிறது.

கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் உருவான ஏழை ஜாதி திரைப்படம் வெளியோகி இன்றோடு 31 ஆண்டுகளாகிறது.

தமிழ் சினிமா இன்றைக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் பல்வேறு வளர்ச்சிகளை கண்டிருந்தாலும், பழைய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் மவுசு குறையவில்லை என்றே சொல்லலாம். அதனால்தான் இன்றைக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பழைய படங்கள் மறுஉருவாக்கம் செய்யப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

HBD Pasupathy: கூத்துப்பட்டறையால் செதுக்கப்பட்டவர்! சென்னை மண்ணின் மைந்தன், தமிழ் சினிமாவின் மகா கலைஞன் பசுபதி

Middle Class Madhavan : 6 மணிக்கு மேல் போதை ஆசாமி.. நடுத்தர மக்களின் வாழ்க்கை பயணம்.. 23ஆம் ஆண்டில் மிடில் கிளாஸ் மாதவன்

100வது படமாக தேர்வு.. கொடிக்கட்டி பறந்த சிவகுமார்.. பட்டி தொட்டி எங்கும் இளையராஜா இசை

Actress Shanthi Williams: ‘மோகன்லாலுக்கு நன்றியே கிடையாது.. என் புருஷன் இறுதிச்சடங்கிற்கு கூட அவன் வரல’ - சாந்தி பளார்

சில படங்கள், மறக்கவே முடியாத படங்களாகவும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காத படங்களாகவும் அமைந்துவிடுவது உண்டு. மறக்க முடியாத பாடல்கள், நகைச்சுவை காட்சிகள், திகைப்பூட்டும் க்ரைம் காட்சிகள், வாழ்க்கை தத்துவங்கள் என ஏதோ ஒன்றின் மூலம் பழைய திரைப்படங்கள் நம்மை பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன.

அந்த வகையில், மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ஏழை ஜாதி திரைப்படம் இன்றைக்கு நம்மை பின்னோக்கி இழுத்துச் செல்கிறது. ஆம், இந்தப் படம் வெளியாகி இன்றோடு 31 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

'ஏழை ஜாதி' 1993 ஆம் ஆண்டு இதே பிப்ரவரி 19 ஆம் தேதி வெளிவந்த அரசியல் சார்ந்த தமிழ்த் திரைப்படமாகும். இந்தப்படத்தில் சுபாஷ் சந்திரபோஸாக விஜயகாந்தும் திலகவதியாக ஜெயபிரதாவும் நடித்திருந்தனர். விஜயகாந்த் தனது திரையுலக வாழ்க்கையில் எத்தனையோ அதிரடி ஆக்சன் படங்களில் நடித்திருந்தாலும் ஏழை ஜாதி திரைப்படம் அவரது பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இந்த படம் விஜயகாந்த்க்கு திரையுலகில் மீண்டும் ஒரு வெற்றியை கொடுத்து அவரை ஊக்கப்படுத்தியது.

லியாகத் அலிகான் தான் இந்த படத்தின் வசனகர்த்தா மற்றும் இயக்குனர். இந்த படத்தின் ஒவ்வொரு வசனமும் அனல் பறக்கும். குறிப்பாக அரசியல் வசனம் 1990களில் காலகட்டத்தில் இருந்த அரசியல்வாதிகளை நையாண்டி செய்யும் வகையில் இருந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அன்றைய காலகட்டத்தில் இருந்த ஆளும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் நயவஞ்சகமாக அப்பாவி மக்களை சுரண்டியது எப்படி என்பது போன்ற காட்சிகள் இந்த படத்தில் தைரியமாக வைக்கப்பட்டிருந்தது.

மனோரமா, மன்சூர் அலிகான், செந்தில், விஜயகுமார், வடிவேலு, எம்.என்.நம்பியார் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற 6 பாடல்களில் 'ஏழை ஜாதி கோழை ஜாதி அல்ல.., 'அதோ அந்த நதியோரம்' ஆகிய இரண்டு பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகியது. இந்த படம் கடந்த 1993 ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி வெளியானது. இந்த படத்தின் வசனங்களுக்காகவே மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. இத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் 31 வருடங்களை நிறைவு செய்து 32-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

ஆனால், நேற்று ரிலீசானது போல் உள்ளது. காலங்கள் உருண்டோடினாலும் விஜயகாந்தின் அனல் தெறிக்கும் அரசியல் வசனங்களில் இந்தப்படமும் ஒரு மைல்கல்லாக அமைந்தது. மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனதை விட்டு நீங்காத கேப்டனின் புகழை இந்நாளில் நினைத்து பார்ப்போம். அவரின் அரசியல் வாழ்க்கையில் முதல் வெற்றிப்படமாக அமைந்த ‘ஏழை ஜாதி’யை நினைவுகூர்வோம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி