தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Valentine's Day: 2k Kids மோசம்! காதல் கடிதம் எழுத எங்க உதவி கேட்குறாங்க பாருங்க!

valentine's day: 2k kids மோசம்! காதல் கடிதம் எழுத எங்க உதவி கேட்குறாங்க பாருங்க!

Feb 10, 2023, 01:51 PM IST

78 சதவிகிதம் இந்தியர்களுக்கு மனிதன் எழுதிய கடிதத்திற்கும் AI chatbotன் கடிதத்திற்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது தெரியவந்துள்ளது.
78 சதவிகிதம் இந்தியர்களுக்கு மனிதன் எழுதிய கடிதத்திற்கும் AI chatbotன் கடிதத்திற்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது தெரியவந்துள்ளது.

78 சதவிகிதம் இந்தியர்களுக்கு மனிதன் எழுதிய கடிதத்திற்கும் AI chatbotன் கடிதத்திற்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது தெரியவந்துள்ளது.

பிப்ரவரி 14தேதி உலகெங்கும் காதலர் தினம் கொண்டாடும் மகிழ்ச்சியில் காதலர்கள் உள்ளனர். அன்றைய தினம் தங்களது பார்ட்னரை குஷிப்படுத்த ஸ்பெஷல் கிப்ட், ரோஸ், சாக்லேட், காதல் கடிதம் என பலவகையான முன்னேற்பாட்டில் இளைஞர்கள் உள்ளனர். ஆனால் பாவம் காதல் கடிதம் எழுத அமர்ந்தவர்களுக்கு என்ன எழுதுவது என்று தெரியாமல் ChatGPT யிடம் உதவி கேட்டுள்ளனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Indian 2: ஒருவழியாக தொப்பியைப் போட்டுக்கொண்டு வந்த சேனாதிபதி.. இந்தியன் 2 ரிலீஸ் டேட்டை அறிவித்த ஷங்கர்!

Good Bad Ugly: கையில் டாட்டூ.. மாஸ் கூலர்.. 3 பரிணாமங்கள்.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

Sobhita Dhulipala:‘தங்கத் தாரகை மகளே’ கேன்ஸ் விழாவில் தங்க ஆடையில் ஜொலித்த சோபிதா துலிபாலா: உடன் அந்த நடிகர் இருக்காரா?

Actress Madhoo: பாறையிலேயே உறக்கம், வெட்ட வெளியில் உடை மாற்றிய தருணம்! ஷுட்டிங்கில் நடந்த தர்மசங்கடம் - நடிகை மதுபாலா

அது என்ன ChatGPT

OpenAI நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்ட ChatGPT மென்பொருளானது Generative Pre-trained Transformer கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இது மனிதனே எழுதுவது போன்ற எழுத்துருக்களை உருவாக்கும் திறன் கொண்டது. கேட்கப்படும் தலைப்புகள் அல்லது கேள்விகளுக்கு ஏற்ப கதை, கட்டுரை, கவிதை, ஆய்வு கட்டுரைகள் ஆகியவற்றை எளிய முறையில் வடிவமைக்கும் வல்லமை கொண்ட இந்த செயற்கை நுண்ணறிவு செயலி கூகுள் நிறுவனத்திற்கு போட்டியாக பார்க்கப்படுகிறது. தொடக்கத்தில் இந்த நிறுவனத்தில் ட்விட்டர் அதிபர் எலான் மஸ்க் முதலீடு செய்த நிலையில், பில்கேட்சின் மைக்ரோசாப்ட் நிறுவனம் 10 பில்லியன் டாலர்கள் வரை முதலீடு செய்துள்ளது.

மாணவர்களின் எழுதும் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு அவர்களின் எழுத்தின் தரத்தை மேம்படுத்தவும், ஆராய்ச்சி கட்டுரைகள் உருவாக்குதல், கேள்விகளுக்குப் பதிலளித்தல், பல்வேறு பாடங்களில் விளக்கங்களை வழங்குதல், இலக்கணம் மற்றும் சொற்களஞ்சியம் பழகுதல், கணிதம், அறிவியல் மற்றும் இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு பாடங்களில் மாணவர்களுக்கு பல்வேறு விளக்கங்களை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த வகை மென்பொருட்களால் கருத்து திருட்டு நடக்க வாய்ப்புள்ளதாகவும் முறைகேடுகளில் மாணவர்கள் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் கூறி ChatGPT மென்பொருளை அமெரிக்கா, பிரான்ஸ், பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் செயல்படும் பல்கலைக்கழகங்கள் மற்றும் பள்ளிகள் தடை விதித்துள்ளது .

காதல் கடிதம் தீட்டவா?

இதைத்தொடர்ந்து வரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் chat GPTமென்பொருளின் உதவியால் 2K Kids காதல் கடிதம் எழுதி வரும் தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் 62 சதவிகிதம் இந்தியர்கள் காதல் கடிதம் எழுத chat GPT மென்பொருளின் உதவியை நாடுவதாக McAfee நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதில் இந்தியா உள்ளிட்ட 9 நாடுகளில் உள்ள 5000 பேரிடம் நடத்திய ஆய்வில் 78 சதவிகிதம் இந்தியர்களுக்கு மனிதன் எழுதிய கடிதத்திற்கும் AI chatbotன் கடிதத்திற்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில் Chat Gpt மென்பொருள் காதல் கடிதம் கூட எழுதத்தெரியாமல் இளைஞர்கள் இருப்பதை படமிட்டு காட்டுகிறது என பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி