தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  24 Years Of Anantha Poongatre : பாடல்கள் பயங்கர ஹிட்! அஜித், மீனா நடிப்பு அபாரம்! இதமாக மனதை வருடிய ஆனந்த பூங்காற்றே!

24 Years of Anantha Poongatre : பாடல்கள் பயங்கர ஹிட்! அஜித், மீனா நடிப்பு அபாரம்! இதமாக மனதை வருடிய ஆனந்த பூங்காற்றே!

Priyadarshini R HT Tamil

May 27, 2023, 05:45 AM IST

24 Years of Aanatha Poongatre : வெள்ளி விழா ஆண்டை நோக்கி வீறு நடை போடுகிறது அஜித், மீனாவின் அபாரமான நடிப்பில் வெளியான ஆனந்த பூங்காற்றே திரைப்படம். அந்தப்படம் குறித்து தெரிந்துகொள்ளலாம்.
24 Years of Aanatha Poongatre : வெள்ளி விழா ஆண்டை நோக்கி வீறு நடை போடுகிறது அஜித், மீனாவின் அபாரமான நடிப்பில் வெளியான ஆனந்த பூங்காற்றே திரைப்படம். அந்தப்படம் குறித்து தெரிந்துகொள்ளலாம்.

24 Years of Aanatha Poongatre : வெள்ளி விழா ஆண்டை நோக்கி வீறு நடை போடுகிறது அஜித், மீனாவின் அபாரமான நடிப்பில் வெளியான ஆனந்த பூங்காற்றே திரைப்படம். அந்தப்படம் குறித்து தெரிந்துகொள்ளலாம்.

இந்தப்படத்தின் பெரிய பிளஸே இந்தப்படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட்டானதுதான். தேவாவின் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட்டானது. அது ஒரு தேவா இரா என்றே கூறலாம். அப்போதைய படங்களில் அவரின் பாடல்கள் அவருக்கும், அந்தப்பாடல்களில் தோன்றியவர்களுக்கும் நல்ல புகழை பெற்றுக்கொடுத்தது. மீனாட்சி, மீனாட்சி, அண்ணே காதல் என்னாச்சு? உதயம் தியேட்டருல ஏன் இதயத்தை தொலைச்சேன் கானா பாணியிலான பாடல், தேவாவின் கானா பாடல்கள் மிகப்பிரபலமாகவும், ஹிட் பாடலாகவும் இருந்த காலகட்டம் அது.

ட்ரெண்டிங் செய்திகள்

Siddharth: ‘சித்தா’ கொடுத்த பம்பர் ஹிட்; சிவகார்த்தியேனின் நெருக்கமானவருக்கு டேட் கொடுத்த சித்தார்த்! - அறிவிப்பு உள்ளே!

Thalapathy Vijay: ‘டேய் ஒழுங்கா பண்றா…சம்பவம் தரமா இருக்கணும்’ - கோட் அப்டேட் கொடுத்த வெங்கட்பிரபு

Middle Class Madhavan : 6 மணிக்கு மேல் போதை ஆசாமி.. நடுத்தர மக்களின் வாழ்க்கை பயணம்.. 23ஆம் ஆண்டில் மிடில் கிளாஸ் மாதவன்

100வது படமாக தேர்வு.. கொடிக்கட்டி பறந்த சிவகுமார்.. பட்டி தொட்டி எங்கும் இளையராஜா இசை

கானா வழக்கமான பாடல் பாணிகளில் இருந்து சிறிது மாறுபட்டு காணப்பட்டதால் அப்போதைய 90ஸ் கிட்ஸ்களிடம் அது எளிதாக சென்று சேர்ந்துவிட்டது. செம்மீனா, விண்மீனா, சோவைக்குயில் பாடும் சொல்லிக்கொடுத்தது யாரு? என்ற பாடல்கள் மெலடி பாடல்கள். பாட்டுக்கு பாலைவனம் பூ பூக்கும் என்ற பாடல் ஃபாஸ்ட் பீட் பாடல், பாடல்கள் அனைத்தையும், ஹரிஹரன், ஸ்ரீனிவாஸ், சுஜாதா, ஸ்வர்ணலாதா, தேவா, கிருஷ்ணராஜ், சபேஷ் என அந்தக்காலத்தின் ஹிட் பாடகர்கள் பாடியிருப்பார்கள். குறிப்பாக தேவாவின் கானாவை அவர் குரலில் கேட்கும்போது ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். இன்றும் சென்னை நெடுஞ்சாலை மோட்டல்களில் இந்த வகை கானா பாடல்கள் ஒரு தனி வகை உணர்வு கொடுப்பதாக இருக்கும்.

அஜித் வசிக்கும் இடத்தில் மீனாவும் தனது குழந்தையுடன் வசிப்பார். அஜித்துக்கு அவர் மீது காதல் வந்துவிடும். ஆனால் மாளவிகா அஜித்தை துரத்தி, துரத்தி காதலிப்பார் என்ற முக்கோண காதல் கதையாக இருக்கும். இந்தப்படத்தை ராஜ்கபூர் இயக்கியிருப்பார். இந்தப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து, படம் வணிக ரீதியாக நல்ல வெற்றியை பெற்றது. அஜித்தின் கெரியர் வளர்ச்சிக்கு அந்தக் கால காதல் படங்கள் உதவின. அmந்த வகையில் இந்தப்படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்த படம்.

ஆனால், மீனாவோ அஜித் காதலை ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு ஏற்றுக்கொள்ளமாட்டார். ஆனால், அஜித் அவருக்காக வாழ்ந்துகொண்டிருப்பார். அஜித்தை துரத்தி துரத்தி காதலிக்கும் மளவிகாவால் ஏற்பட்ட குழப்பத்தில் மீனாவின் கடந்த காலம் என்வென்று தெரியவரும். அதில் மீனாவின் இசை ஆசிரியர் கார்த்திக், அவரது மகனைத்தான் தற்போது மீனா வளர்த்து வருவார். கார்த்திக்கின் மனைவி பிரசவத்தின்போதே இறந்துவிடுவார். கார்த்திக்கை தனது மகளை காதலிப்பதாக நினைத்து மீனாவின் தந்தை கொலை செய்துவிடுவார். 

இதனால் ஆத்திரமடைந்த மீனா கைம்பெண் வேடம்கொண்டு ஏற்கனவே தாயையும், தனது தந்தையால், தந்தையையும் இழந்த குழந்தைக்காக வாழ துவங்கிவிடுவார். இந்தக்கதை தெரிய வந்தவுட்ன், மீனாவின் தந்தைக்கு அஜித் அவரது மனதை மாற்றி திருமணம் செய்துகொள்வேன் என்று வாக்குகொடுக்கிறார். மனம் மாறாத மீனா, அந்தக்குழந்தையை கடத்திவைத்துக்கொண்டு மாளவிகாவை திருமணம் செய்துகொள்ளுமாறு அவரது தந்தை அஜித்தை மிரட்டுவார். 

அனைத்து பிரச்னைகளையும் தீர்த்து மீனாவை திருமணம் செய்தாரா அல்லது சூழ்ச்சிக்கு அடிபணிந்து மாளவிகாவை திருமணம் செய்தாரா அஜித் என்பதுதான் படத்தின் கதை.

மணிவண்ணன், வடிவேலு, விஜயகுமார், ராஜ்கபூர், ராஜன், கோவை சரளா, சி.ஆர்.சரஸ்வதி, மனோபாலா, மயில்சாமி, மதன்பாப், அம்பிகா, பானுப்பிரியா, ராஜீசுந்தரம் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும். 

அனைவரும் திரைக்கதைக்கு வலு சேர்க்கும் விதமாக நடிப்பில் கலக்கியிருப்பார்கள். மீனாவின் கதாபாத்திரம் மற்றும் உடை மிக நேர்த்தியாக இருக்கும்.

மாளவிகாவின் கதாபாத்திரத்தில் விந்தியா நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் சங்கமம் படத்தில் நடித்தால் இந்த வாய்ப்பை தவறவிட்டார்.

இந்தப்படத்திற்கு சிறந்த உரையாடல் மற்றும் பெண்களை நன்றாக சித்தரித்தது என்ற இரண்டு மாநில விருதுகளைப் பெற்றது. இந்தப்படம் தெலுங்கில் சுபகர்யம் என்ற பெயரில் மீண்டும் எடுக்கப்பட்டது. கன்னடத்தில் ராஜகுமாரி என இயக்கப்பட்டு வெளியானது. வெள்ளி விழா ஆண்டை நெருங்குகிறது ஆனந்த பூங்காற்றே.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி