தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Namitha: ரசிகர்களை மச்சான்ஸ் என கொஞ்சும் நடிகை நமீதாவின் பிறந்தநாள் - 90’ஸ் கிட்ஸ்களால் மறக்கமுடியுமா?

HBD Namitha: ரசிகர்களை மச்சான்ஸ் என கொஞ்சும் நடிகை நமீதாவின் பிறந்தநாள் - 90’ஸ் கிட்ஸ்களால் மறக்கமுடியுமா?

Marimuthu M HT Tamil

May 10, 2024, 06:58 AM IST

HBD Namitha: தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் முன்னணியாக நடிகையாக வலம் வந்த நமீதா, இன்று தனது 43ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். தமிழ் ரசிகர்களை மச்சான்ஸ் என அழைப்பதால் தனித்து அறியப்பட்டவர் நடிகை நமீதா. அவர் குறித்தான ஒரு சிறப்புக் கட்டுரை..
HBD Namitha: தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் முன்னணியாக நடிகையாக வலம் வந்த நமீதா, இன்று தனது 43ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். தமிழ் ரசிகர்களை மச்சான்ஸ் என அழைப்பதால் தனித்து அறியப்பட்டவர் நடிகை நமீதா. அவர் குறித்தான ஒரு சிறப்புக் கட்டுரை..

HBD Namitha: தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் முன்னணியாக நடிகையாக வலம் வந்த நமீதா, இன்று தனது 43ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். தமிழ் ரசிகர்களை மச்சான்ஸ் என அழைப்பதால் தனித்து அறியப்பட்டவர் நடிகை நமீதா. அவர் குறித்தான ஒரு சிறப்புக் கட்டுரை..

HBD Namitha: நமீதா முகேஷ் வங்கவாலா என்கிற நடிகை நமீதா, தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் நடித்து முன்னணியாகத் திகழ்ந்தவர். தமிழ் ரசிகர்களை மச்சான்ஸ் என அழைக்கும் நடிகை நமீதா இன்று தனது 43வயது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அரபு குதிரை போல் இருக்கும் தன் வாலிப்பான உடலமைப்பாலும் கட்டழகாலும் பல ரசிகர்களைக் கட்டிப்போட்டவர். அவரைப் பற்றி அறிந்து கொள்ள நம்மிடம் ஏராளமான விஷயங்கள் உள்ளன. வாருங்கள் பார்க்கலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

Vijay: குடும்ப விஷயத்தில் நுழைந்து பஞ்சாயத்து செய்த விஜய்.. கண்டுகொள்ளாத ஜி.வி.பிரகாஷ்!

HBD Vijay Vasanth: நடிகர் விஜய் வசந்துக்கு பிறந்த நாள்.. நடிகர், தொழிலதிபர், அரசியல்வாதி என பல குதிரை பயணியின் கதை!

Bayilvan Ranganathan: மெய் மறந்து கொடுத்த முத்தம்.. இயக்குநர் கட் சொல்லியும் காதில் வாங்கி கொள்ளாத சிம்பு, த்ரிஷா?

HBD Balu Mahendra: Dusky ஹீரோயின்களை கேமரா லென்ஸ்களின் வழியே அழகுற ரசிக்க வைத்த வித்தகர் பாலு மகேந்திரா

குஜராத் மாநிலம், சூரத்தில் வசிக்கும் பஞ்சாபி மொழி பேசும் தொழில் அதிபர் முகேஷ் வங்கவாலாவின் ஒரே மகள் நமீதா. இவர் குஜராத் மாநிலம், சூரத்தில் 1981ஆம் ஆண்டு, மே 10ஆம் தேதி பிறந்தார். தனது 17 வயதில் மிஸ் சூரத் பட்டம் வென்றதும் ஊடக வெளிச்சத்துக்கு வந்த நமீதா, அதன்பின்னர், படிப்பில் கவனம் செலுத்தி, ஆங்கில இலக்கியத்தைப் படித்து முடித்தார். இதற்கிடையே, மும்பையில் குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டே, மாடலிங்கில் வாய்ப்புத் தேடினார்.

 மாடலிங் துறையில் இருந்த ஆர்வத்தால்,2001ஆம் ஆண்டு நடைபெற்ற ‘மிஸ் இந்தியா’ அழகிப்போட்டியில் பங்கேற்று நான்காவது இடம்பிடித்தார்.

அப்போது ’மிஸ் இந்தியா’ போட்டியில் கிடைத்த புகழ் வெளிச்சத்தால் அருண் ஐஸ்கிரீம், நீல் ஹெர்பல் சாம்பூ, ஹிமானி கிரீம் ஆகியவற்றின் விளம்பரங்களில் நடித்தார்.

சினிமாவில் கதாநாயகி அவதாரம்: 

தெலுங்கு சினிமாவில் ’சொந்தம்’ என்னும் படம் மூலம் சினிமாவில் கால் எடுத்து வைத்த நமீதா, அப்போது பைரவி என்னும் பெயரில் அழைக்கப்பட்டார். தனது முதல் இரண்டு தெலுங்கு படங்களுக்கு இப்பெயரையே பயன்படுத்தினார். அதன்பின்னர், தமிழில் ‘எங்கள் அண்ணா’ படத்தில் விஜயகாத்தின் ஜோடியாக நடித்தபோது, அவர் தனது ஒரிஜினல் பெயரை பயன்படுத்தினார். அப்போது இருந்து இப்போது வரை நமீதாவே.

2004ஆம் ஆண்டில், இயக்குநர் ஷக்தி சிதம்பரத்தின் இயக்கத்தில் நடிகை நமீதா, ’மகா நடிகன்’ படத்தில் நடிகர் சத்யராஜூடன் ஜோடிபோட்டு கிளாமர் மற்றும் மாடர்ன் ரோலில் நடித்தார். அதன்பின், நமீதாவின் மார்க்கெட் கிராஃப் தமிழில் எகிறியது. ஆம். அவரது அடுத்த படமான ‘ஏய்’ படம், நமீதாவுக்கு நடிகர் சரத் குமாருடன் மிக நல்ல கெமிஸ்ட்ரியை ஒர்க் அவுட் செய்தது. இப்படத்தில் வந்த ‘அர்ஜூனா அர்ஜூனா’ பாடலால் இளசுகள் முதல் பெருசுகள் வரை கவர்ச்சிக் கட்டழகியாகப் பிரபலம் ஆனார், நமீதா.

நமீதாவை கவர்ச்சி கட்டழகியாக மாற்றிய சக்தி சிதம்பரம்!:

மேலும் இதைப் புரிந்துகொண்ட இயக்குநர் ஷக்தி சிதம்பரம், தான் இயக்கும் அனைத்துப் படங்களிலும் நமீதாவை பயன்படுத்தினார். இங்கிலீஷ்காரன், கோவை பிரதர்ஸ், வியாபாரி என அந்தப் பட்டியல் நீண்டது. அதேபோல், ‘ஏய்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஏ.வெங்கடேஷ், நடிகை நமீதா மற்றும் சரத் ஜோடியை வைத்து ‘சாணக்யா’ எனும் படத்தை எடுத்தார். இதற்கிடையே பம்பரக் கண்ணாலே, ஆணை, பச்ச குதிர, நீ வேணுண்டா செல்லம் ஆகியப் படங்கள் நமீதாவின் கவர்ச்சிக்காகவே ஓடின. தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதாவுக்கு அடுத்து, நடிகையால் படம் ஓடியது என்றால், அது நமீதாவுக்காகவே எனலாம். அதேபோல், குஷ்பூவுக்குப் பின், கோயில் கட்டப்பட்டது நடிகை நமீதாவுக்காக தான்.

பின், அழகிய தமிழ் மகன் படத்தில் விஜய்யுடன் சில சீன்களிலும், பில்லா ரீமேக்கில் அஜித்துடன் சில சீன்களிலும் நடித்து, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடிக்கவேண்டும் என்ற தன் ஆசையை நிறைவேற்றிக்கொண்டார்.

வடிவம் மாறிய நமீதா: 

அதன்பின், இன்னும் சற்று பருமனான நடிகை நமீதா, தனது பழைய கவர்ச்சியை இழந்தார். இருந்தாலும் சண்டை, பாண்டி, பெருமாள், தீ, 1977, இந்திர விழா, ஜெகன் மோகினி, பிளாக் ஸ்டாலின், குரு சிஷ்யன், அழகான பொண்ணுதான், இளைஞன் ஆகியப் படங்களில் கிளாமர் குறையாத ரோல்களில் நடித்தார். அதன்பின், வாய்ப்புகள் மெல்ல மெல்ல நமீதாவுக்கு குறைந்தன. 

பின் கலைஞர் தொலைக்காட்சியில் ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் கரை ஒதுங்கிய நமீதா, அங்கு சிறப்பாக ஆடும் ஒவ்வொரு போட்டியாளர்களையும் ‘ஹாய் மச்சான்ஸ்’என செல்லமாக அழைக்கும் விதம் மிகப்பிரபலமானது. அதன்பின், எந்தவொரு விழாமேடையில் தோன்றினாலும், இந்த வார்த்தையை உபயோகிக்க நடிகை நமீதா தவறமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நடிகை நமீதாவின் அரைகுறையான தமிழ்ப் பேச்சுவழக்கும் பலரால் இமிடேட் செய்யப்பட்டது.

பின், தனது 13 வருட காதலரான வீரேந்திர செளத்ரியுடன் நமீதா, திருப்பதியில் வைத்து 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியினருக்கு 2022ஆம் ஆண்டு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.  சில ஆண்டுகளுக்கு முன் பாஜகவில் சேர்ந்த நமீதா, சமீபத்திய தேர்தல் பரப்புரைகளில் கூட கலந்துகொண்டு வாக்குசேகரித்தார். 

ஒரு காலத்தில் பலரின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்த நடிகை நமீதா இன்றுடன் தனது 43ஆவது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அவருக்கு இந்துஸ்தான் டைம்ஸ் சார்பில் வாழ்த்துகள்!

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி