தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  விபத்தில் சிக்கிய சுதா கொங்கரா: வருத்தத்துடன் போட்ட ட்வீட்!

விபத்தில் சிக்கிய சுதா கொங்கரா: வருத்தத்துடன் போட்ட ட்வீட்!

Karthikeyan S HT Tamil

Feb 05, 2023, 01:29 PM IST

Sudha Kongara met accident: தமிழில் ஹிட்டான சூரரைப் போற்று படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார் இயக்குனர் சுதா கொங்கரா.
Sudha Kongara met accident: தமிழில் ஹிட்டான சூரரைப் போற்று படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார் இயக்குனர் சுதா கொங்கரா.

Sudha Kongara met accident: தமிழில் ஹிட்டான சூரரைப் போற்று படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார் இயக்குனர் சுதா கொங்கரா.

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் 2020 ஆம் ஆண்டு வெளியான படம் சூரரைப் போற்று. இப்படம் தியேட்டரில் வெளியாகமல் நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்துக்கு தேசிய விருதுகளும் வழங்கப்பட்டன.

ட்ரெண்டிங் செய்திகள்

Indian 2: ஒருவழியாக தொப்பியைப் போட்டுக்கொண்டு வந்த சேனாதிபதி.. இந்தியன் 2 ரிலீஸ் டேட்டை அறிவித்த ஷங்கர்!

Good Bad Ugly: கையில் டாட்டூ.. மாஸ் கூலர்.. 3 பரிணாமங்கள்.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

Sobhita Dhulipala:‘தங்கத் தாரகை மகளே’ கேன்ஸ் விழாவில் தங்க ஆடையில் ஜொலித்த சோபிதா துலிபாலா: உடன் அந்த நடிகர் இருக்காரா?

Actress Madhoo: பாறையிலேயே உறக்கம், வெட்ட வெளியில் உடை மாற்றிய தருணம்! ஷுட்டிங்கில் நடந்த தர்மசங்கடம் - நடிகை மதுபாலா

தமிழ் மொழியில் மட்டுமல்லாமல், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட இப்படத்தை சினிமா ரசிகர்களையும் தாண்டி ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்டோரும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி இந்த படத்தை இயக்குனர் சுதா கொங்கரா சிறப்பாக உருவாக்கி இருந்தார். இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனான படங்களில் ஒன்றாக கருதப்படும் சூரரைப் போற்று படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார் இயக்குனர் சுதா கொங்கரா. சூர்யா கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். ராதிகா மதன் நாயகியாக நடிக்கிறார். சூர்யா கவுரவ வேடத்தில் நடிக்கிறார்.

தமிழில் ஹிட்டான சூரரைப் போற்று படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார் இயக்குனர் சுதா கொங்கரா. சூர்யா நடித்திருந்த மாறா கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். ராதிகா மதன் நாயகியாக நடிக்கிறார். சூர்யா கவுரவ வேடத்தில் நடிக்கிறார்.

சமீபத்தில் சுதா கொங்கரா முதல்முறையாக சொகுசு காரை வாங்கியிருந்தார். ஆடி நிறுவனத்தின் எலக்ட்ரிக் காரை வாங்கியிருந்த அவர், அதில் தன் குரு மணிரத்னம், சூரரைப் போற்று குழுவான இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், நடிகர் சூர்யா, 2டி ராஜசேகரபாண்டியன் ஆகியோருடன் ஜாலி ரைடு சென்றிருந்தார். இந்தப் படத்திற்கான இசையை சமீபத்தில் தொடங்கியதாக ஜி.வி.பிரகாஷும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இயக்குனர் சுதா கொங்கராவிற்கு படப்பிடிப்பின் போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டுள்ளது. கையில் காயத்துடன் விபத்துக்குள்ளானது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “வலிமிகுந்துள்ளது... இன்னும் ஒரு மாதத்திற்கு படப்பிடிப்பு இல்லை.” எனவும் பதிவிட்டுள்ளார். இது எனக்கு தேவையற்ற பிரேக் எனவும் அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவிற்கு, “விரைவில் குணமடையுங்கள் சகோதரி” என இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி